குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

ஸ்ரீ வள்ளலார் கோயில்
இறைவன் : ஸ்ரீ வழிகாட்டும் வள்ளலார் (ஸ்ரீவதாண்யேஸ்வரர்)
இறைவி : ஸ்ரீஞானாம்பிகை
தீர்த்தம் : ஞானாமிர்தசரஸ்

மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் மாயூரத் தலபுராணத்தில் மலிதவப்பெருதை காட்டி வயங்கிடு மற்றோர் கூற்றில் பொலிதரு சேமேற்கொண்டு தென்முகம் பொருந்த நோக்கி என்கிறார். அதாவது ஒரு சமயம் ரிஷிபதேவர் அகம்பாவம் கொண்டார். உலகையே காக்கும் எல்லாம் வல்ல ஈசனைத் தாங்கும் வலிமையும்
புண்ணியமும் பெற்றவர் நாமே என்று. இதை உணர்ந்த இறைவன் தன் சடாமுடியுடன் ஒரு நுனியை எடுத்து ரிஷிபத்தின் மிது வைத்தார்.

20 இமையமலையைத் துக்கி வைத்தது போல் இருந்தது ரிஷிபருக்கு. தன் தவறு உணர்ந்து இறைவா நான் அறியாத செய்த பிழை பொருத்தருள்க. ஆன்மாக்கள் குற்றம் செய்வது இயல்பு. அதை நீக்கி ஞானமருள்வது இறைவனின் இயல்பு. எனவே அருள் வேண்டும் பிரபோ என வேண்ட எம்பெருமான் மனமிரங்கி ஞானோபதேசம் செய்தார். அவ்வாறு குருமூர்த்தியாக இருந்த நிலையிலும் ரிஷபரை வாகனமாக ஏற்று மகிழ்ந்தார். ஆகவே இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி யோகாசனத்தில் ஞானமுத்திரைக்கையராக நந்திதேவர் மீது வீற்றிருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம்.

பாவம் கலையும் காவிரி
கங்கை,யமுனை,சரஸ்வதி ஆகிய தேவநதி தெய்வங்கள் தங்களிடம் மூழ்கிய மக்களின் பாவங்களை ஏற்றுக்கொண்டதால் பொலிவிழந்து கரிய உருவமடைந்தனர். பின் அவர்கள் காவிரியில் நீராடி மாயூர ஞானவள்ளலை வழிபட பாவம் தொலைந்தது. பாவமும் கரிய உருவமும் நீங்கப்பெற்றனர். இதையறிந்த ஐம்புலனடக்கிய கண்வமகாரிஷியும் இத்தலத்து ஞான தீர்த்தக்கரையில் ஆசிரமம் கொண்டு வழிபட்டு சிவஞானம் கைவரப்பெற்றனர். அகஸ்தியர் இத்தல இறைவனை வழிபட்டு சிவஞானப் பேறுபெற்றார்.

இத்தலத்தில் உள்ள தீர்த்தம் பிரம்மனால் உண்டாக்கப்பட்டது. (ஞானமிர்தசரஸ்) இதில் பஞ்சப்பிரம்மலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் பஞ்சபிரம்மதீர்த்தம் எனவும் அழைக்கப்பெரும்.

பொருளும் மெய்பொருளும் பெறலாம்
இத்தீர்த்தத்தில் கார்த்திகை சோமவாரத்தில் நீராடி ஸ்ரீ வதாண்யேஸ்வரரையும் ஸ்ரீஞானாம்பிகையையும் விதிப்படி வழிபட்டு ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்குவோர்
பொன்னும் மெய்பொருளும் எய்துவர்.

சிற்பச்செய்தி
தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் விளநகர் அருள்மிகு துரைக்காட்டு வள்ளலார் திருக்கோயில் சோழப்பெரு மன்னர்கள் காலத்தில் சிறந்து திகழ்ந்த ஒன்று. தற்போது திகழும் இக்கோயிலைத் தஞ்சை நாயக்க மன்னன் அச்சுதப்ப நாயக்கன் முற்றிலுமாகப் புதுப்பித்தான். இதனால் பழைய கல்வெட்டுகள் அழிந்தன. அப்படி அழிந்த கல்வெட்டுகளில் ஒரு சில துண்டுகள் இன்று எஞ்சி இத்திருக்கோயிலில் ஆங்காங்கே துண்டுக் கல்வெட்டுகளாய் உள்ளன. அவற்றில் இராசரசன் காலத்திய சாசனங்கள் சில உள்ளன. இத்திருக்கோயிலின் திருசுவற்றிலுள்ள மண்டபம் ஒன்றில் சோழர் கால உருவசிலைகள் ஒன்று உள்ளது. இது கலைப்பணியால் இராசராசன் கால அமைதியுடன் திகழ்கிறது. மேலும் இம்மன்னின் மற்றச் சிலைகளை இதனுடன் ஒப்பிடும் போது இதனை இராசராசனின் படிமமாகவே ஏற்றுக்கொள்ளலாம்.

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon