குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

திருவிசலூர் (திருவிசநல்லூர்)

இறைவன் : ஸ்ரீசிவயோகிநாதர் (ஸ்ரீவில்வாரண்யேஸ்வரர்)

இறைவி : ஸ்ரீசந்த நாயகி

தீர்த்தம் : சடாயுதீர்த்தம்

செம்மென்சடையவை தாழ்வுற மடவார்மனை தோறும்
பெய்ம்மின் பலியென பகர்வாரவ ரிடமா
மும்மென்றெழு மருவித்திரள் வரைபற்றிட வுரைமேல்
விம்மும் பொழில் கெழுவும் வயல் விரிநீர் வியலூரே
திருஞானசம்பந்தர்

 

பெண்பாவம் பொல்லாத்து என்பது நமக்குத் தெரியும். அந்தப் பெண் பாவத்தையும் போக்கும் ஸ்தலம் தான் திருவிசநல்லூர். கேரள நாட்டு ராஜா கணபதி என்பவன் பல பெண்களுடன் தொடர்பு வைத்தும் பெண்களை ஏமாற்றியும் வஞ்சித்து பாவச் செயல்கள் பல செய்து வந்தான். தன் தவரை உணர்ந்து திருவிசநல்லூர் வந்தான். காவேரியில் நீராடி இத்தல இறைவனை வணங்கி பாவங்கள் நீங்கப்பெற்றான். நம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த தவறால் பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால் இத்தலம் வந்து வழிபட சாபம் நீங்கும் என்பது ஐதீகம்.

அதுபோலவே முன்னோர் செய்த பெண் கொலைப்பழியால் குடும்ப நீதியாக அவதிபடுவோரும், பாவதொழில் புரிவோரும் இத்தலம் வந்து பரிகாரம் செய்யலாம். 14 சாஸ்திரங்களில் ஒன்றான திருஉநதியாரை இயந்நிய உய்யவந்து தேவநாராயனார் இத்தலத்தில் அவதரித்தவர் ஆவார். பசியால் வருந்திய அரிசனன் ஒருவனுக்கு சிரார்த்த (திசவம்) தினத்தன்று பசிப்பிணி போக்கி குற்றமன்று என நீருபித்து கங்கையையே இத்தலத்திற்கு வரவழைத்த ஸ்ரீ ஸ்ரீதர்வய்யாவான் வாழ்ந்ததும் இத்தலத்தில்தான்

 

 

94 கல்வெட்டுகளுடன் பழபெருமையை பறைசாற்றும் இக்கோயில் ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாகவும் விளங்குகிறது இராஜராஜ சோழனின் மூத்த சகோதரியும் வல்லவராயன் வந்தியத்தேவரின் மனைவியுமான குந்தவைநாச்சியார் பழையறையில் இருந்தபொழுது இக்கோயிலுக்கு நிலம் அளித்துள்ளார். இராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டுக்கள் 13 உள்ளன. அதில் திருவிசநல்லூர் உடைய மாததேவருக்கு தங்கக் கவசம் அளித்தும் விளக்கேற்ற நிலமும் ஆடுகளும் அளிக்கப்பெற்றன என்பதும் தெரிகிறது. இராஜேந்திர சோழன் மனைவி நத்தன் செக்பியமாதேவியரால் திருவிளக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

சிவாய நம என்றிருப்போருக்கு ஒரு நாளும் அபாயமில்லை இதுவே உண்மை. இத்தலத்து சிவனடியாரின் உயிரைப் பிடிக்க வந்த இயமனை நந்திதேவர் தண்டித்தார். இயமன் சிவயோகிநாதரை வணங்கி நந்திதேவருக்கு இழைத்த குற்றத்திற்கும் சிவனடியாரின் உயிரைக் கவரவந்த குற்றத்திற்கும் மன்னிப்பு வேண்டி சிவனருள் பெற்றார் என்பது மற்றொருபுராண வரலாறு. எனவே இத்தல இறைவனை வணங்க இயம பயம் நீங்கும் என்பதில் ஐயமில்லை.

சிற்பச்செய்தி
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலுள்ள திருவியலூர் அருள் மிகு சிவயோகிநாதர் திருக்கோயில் இராசஇராசனது வரலாற்றோடு மிக நெருக்கிய தொடர்புடைய திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் இம் மாமன்னன் தன் இறுதிக் காலத்தில் வரலாற்றுஸ் சிறப்புடைய துலாபாரமும் இரணியகர்ப்பமும் செய்தான்.

 

இதற்கு இவனது தேவியான உலகமகாதேவியும் துணை நின்றாள். தன் எடைக்கு எடை தங்கத்தை (துலாக் கோலில் அமர்ந்து) நிறுத்து திருவியலூர்ப்பெருமான் முன்பு பல அறக்கொடைகள் நல்கினான். அதே சமயம் இவனது தேவியான உலகமகாதேவி இரணிய கர்ப்பம் ஏறினாள். தங்கத்தால் செய்த பசுவின் சர்ப்பத்தில் (வயிற்றில்) புகுந்து வெளிவந்து பின்பு அப்பொன்னால் அறக்கொடைகள் நல்குதலே இரணிய கர்ப்பமாகும் இதனைத் திருவியலூர் (திருவிசலூர்) கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன.

 

பின்னாளில் இத்திருக் கோயிலைப் புதுபித்த அற உளம் கொண்டோர் இப்படிமத்தின் பெருமையறிந்து சிதைந்த சிற்பத்தினை ஒத்த நகலாகப் புதிய சிற்பங்களைத் தென்புறத் திருசுவற்றில் இடம்பெறச் செய்தனர்.

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon