குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

திருவிசயமங்கை

இறைவன் : அருள்மிகு வியசநாதர்

இறைவி : அருள்மிகு மங்கைநாயகி

தீர்த்தம் : அர்ஜீன தீர்த்தம், கொள்ளிடம்

தலமரம் : புரசு

மருவமர் குழலுமை பங்கர் வார்சடை
அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி விசய மங்கையே
-திருஞானசம்பந்தர்

குசையும் அங்கையிற் கோச முங்கொண்டவவ்
வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையந் தானுமொன் நாயினான்
விசைய மங்கையுள் வேதியன் காண்மினோ
-திருநாவுக்கரசர்

 

பாண்டுவின் மகன் பணிசெய்து வேண்டும் நல்வரங்கொள் விசயமங்கை என திருநாவுக்கரசு சுவாமிகள் திருக்குறுந்தொகையில் பாடுகிறார். பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான நிகரில்லா வில்வீரன் அருச்சுனன் வழிப்பட்டதால் திருவிசயமங்கை என்றானது. இது கோயில் பெயர் மட்டுமே.

ஊரின் பெயர் கோவிந்த புத்தூர் (கோ கறந்த புத்தூர்) கோ-பசு. பசுவானது சிவலிங்கத்தின் மீது தானே பாலைச்சொரிந்து வழிபட்ட காரணத்தால் இப்பெயர் ஏற்பட்டது என திருஞானசம்பந்த சுவாமிகள்

கோதனம் வழிபடக் குலவும் நான்மறை
வேதியார் தொழுதேழு விசயமங்கை
என இவ்வரலாற்றைக் குறிப்பிடுகிறார்.

 

அப்பரும், ஞானசம்பந்தரும் இக்கோயிலுக்கு வரும் பொழுது கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கெடுத்து ஒடியது. எனவே தெங்கரையில் இருந்தபடியே பதிகம் பாட இவர்களுக்குக் காட்சி கொடுக்கும் பொருட்டு விநாயகரும், முருகனும் தெற்கு நோக்கி திரும்பினர். எனவே இக்கோயிலின் விநாயகரும், முருகனும் தெற்கு நோக்கியுள்ளனர்.

இக்கோயிலின் துர்க்கை மிகக் பழமையான சோழர்காலத் தொன்மையுடையது. சிவனின் வாகனமாக நந்திதேவர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற வரலாற்றை வெள்விடைக்கு அருள் செய் விசயமங்கை உள்ளிடத்து உறைகின்ற உருத்திரன் எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் பாடுகிறார்.

 

பாசுபதம்
குருக்ஷேத்திரப் போரில் வெற்றி பெருவதற்காக அர்ச்சுனன் இறைவனது பாசு பதங்கணையைப் பெறவேண்டி இத்தலத்தில் கடும்தவம் புருந்தான். காட்டுக்குள் சென்று அர்ச்சுனனின் தவத்தைக் கலைக்க துரியோதனன் மூகாசுரனை அனுப்பினான், மூகாசுரன் பன்றி உருவம் கொண்டு அர்ச்சுனனைக் கொல்ல வந்தான். சிவபெருமான் அர்ச்சுனனைக் காப்பாற்ற எண்ணினார். வேடர் வடிவில் வந்து பன்றியின் மீது கணையொன்றைச் செலுத்த பன்றி மாண்டது. பன்றியைக் கொன்றது குறித்து சிவபெருமானுக்கும் அர்ச்சுனனுக்கும் இடையில் சொற்போரும்,விற்போரும் நடந்தது. போரில் அர்ச்சுனனின் வில் முறிந்தது. அர்ச்சுனன் முறிந்த வில்லால் வேடனின் முடிமீது அடிக்க எல்லா உயிர்களின் தலைமிதும் பட்டது. உடனே இறைவன் தோன்றி அர்ச்சுனனுக்கு பாசுபாதக்கணையை அளித்து அருள் செய்தார்.

 

கும்பகோணத்திற்கு வடமேற்கில் உள்ள திருவைகாவூருக்கு வடக்கே 3கி.மீ.தொலைவில் உள்ளது.


 

   

 

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon