குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

திருவீழிமிழலை

இறைவர் : ஸ்ரீவீழிநாதர்

இறைவி : ஸ்ரீ சுந்தர குஜாம்பிகை

தீர்த்தம் : விஷ்ணு தீர்த்தம்

ஸ்ரீமஹாவிஷ்ணு சக்ராயுதம் பெற்ற ஸ்தலம்
1) இங்கு எம்பெருமான் மாப்பிளை சுவாமியாக எழுந்தருளி திருமணத்தடையை நீக்குகிறார்
2) திருமால் தெய்வலோகத்திலிருந்து 16 சிங்கங்கள் தாங்கும் விண்ணழி விமானத்தை கொணர்ந்துள்ளர். இது வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்புடையது.
3) சுவேதகேது இயமனை வென்ற ஸ்தலம்
4) சிபிவேந்தன் வழிபட்ட ஸ்தலம்
5) புரூரவர் வழிபட்ட ஸ்தலம்
6) இரதிதேவிக்கு மன்மதனை தோற்றுவித்த ஸ்தலம்
7) காமதேனு மனுவழிப்ட்ட ஸ்தலம்
8)ஞானசம்மந்தரும் அப்பரும் படிக்காக பெற்ற ஸ்தலம்

கைவேழ முகத்தவனைப் படைத்தோர் போலுங்
கயாசுரனை யவனாற்கொல் வித்தார் போலுஞ்
செய்வேள்வித் தக்கனைமுன் போலுந்
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்
வியன்வீழி மிழலை யிடங்கொண்டார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
-திருநாவுக்கரசர்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்ற 23 திருப்பதிகங்களும் அருணகிரிநாதரால் திருப்புகழும் பாடப்பெற்ற ஸ்தலம். இக்கோயிலில் உள்ள வௌவால் நத்து (வாவல் நெற்றி) மண்டபம் பிரசித்தமானது.
இதை அதிசய திருப்பணி என்பர். கோயில் திருப்பணி செய்யும் சில தலங்களில் உள்ள அரிய திருப்பணிகள் நீங்கலாகச் செய்யும் ஒப்பந்தங்களில் இம்மணடபமும் ஒன்றாகும். சிதம்பரதில் மூவாயிரவர். பெருந்தூறையில் முற்நூற்றுவர். அது போல் இத்தலத்தில் அந்தணர்கள் ஐநூறுவரில் சிவபெருமானும் ஒருவர்,
திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இத்தலத்தில் இறைவனைப் பாடி படிக்காசு பெற்றார். இறைவன் படிக்காசு அளித்த பலிபீடத்தையும் தனித்தனியாக காணலாம்.
மாடக்கோயில் அமைப்பில் வீழிநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் விமானம் தனிச்சிறப்புடையது. திருமால் தெய்வ உலகிலிருந்து வந்து ஸ்தாபித்தது.

திருக்கயிலாயத்தில் சிவபெருமான் பரிவாரங்களுடன் வீற்றிருக்க வைகுண்ட நாதரான திருமால் தோன்றி வழிப்பட்டு ஒர் விண்ணப்பம் செய்தார் பரம்பொருளே சலந்திரனை அழித்த சக்கரத்தை எனக்கு அனுக்கிரகிக்க வேண்டும் என்றார். எம்பெருமான் காவேரிக்கு தெற்கேயுள்ள தேஜீநீ வனத்தில் (திருவீழிமிழலை) நம்மை பூசிப்பாயாக என்று கூற திருமாலும் இத்தலத்தை அடைந்து ஓர் தீர்த்தம் உண்டாக்கி (பத்ம தீர்த்தம்)அதில்செந்தா மரைகளை உண்டாக்கினார்,16 சிங்கங்கள் ஏந்தித் தாங்கும் விண்ணழி விமானத்தை வருவித்து அதில் பெருமானை எழுந்தருளச் செய்தார். நாள்தோரும் தீர்த்தபுர்கரணியிலும் அரிசில் நதியிலும் (அரசலாறு) நீராடி ஆயிரம் தா மரை மலர்களால் பெருமானை அருச்சித்து வழிப்பட்டு வந்தார். ஒருநாள் அர்ச்சிக்க வேண்டிய ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்று குறைந்தது( சிவனின் திருவிலையாடலால்) உடனே திருமால் சற்றும் தாமதியாது தன் கண்களில் வலது கண்ணைப் பறித்து இறைவனின் திருவடிகளில் சாத்தினார். அக மகிழ்ந்த சிவபெருமான் திருமால் முன் தோன்றியருளி அவர் கேட்ட மிகவும் சக்திவாய்ந்த சக்கரப் படையை (சக்கராயுத்தை) வழங்கியருளினார். இதுவே திருமால் சக்கராயுதத்தை இத்தல்த்தில் பெற்ற புராண வரலாறு.

திருமணத்தடையைப் போக்கும் மாப்பிளை சுவாமி
திருமாலின் மலராக விழியைப் பெற்றதால் வீழிநாதர் எனப்பெயர் கொண்ட எம்பெருமான் இத்தலத்திற்கு மாப்பிளை சுவாமியாக வந்து மாப்பிளைசுவாமி எனவும் பெயர் பெற்றுள்ளார். அதாவது முனிவர்களில் சிறந்த காத்தியாயன முனிவர் புர்கரணித்திர்த்தக்கரையில் தவச்சாலை அமைத்து பத்தினியுடன் தங்கி வீழி நாதரையும் அம்மையையும் வழிப்பட்டு வந்தார். அவர்களுக்கு புத்திரப்பேறு இல்லை. அதற்காக யாகம் செய்து வழிப்பட்ட போது அன்பே வடிவான அம்பிகையும் அன்னபூரணியாக தோன்றி முனிவரே உம் யாகத்தில் மகிழ்ந்தோம் வேண்டும் வரம் கேட்கவும்? எனக் கேடக அம்மையே நீங்களே எமக்கு மகளாய் பிறந்து குறை நீக்க வேண்டும் என்றார். அம்பிகையும் அவ்வாறே அருளி தீர்த்த புட்கரணியில் ஒரு பெரிய நீலோற்பவ மலரில் அழகிய பெண் குழந்தையாக இருந்தார்.

இதனைக் கண்ட முனிவரின் மனைவி சுமங்கலை ஆனந்தமாகி அக்குழந்தையை வாரியெடுத்து மார்போடணைத்து கார்யாயன முனிவரிடம் கொடுக்க அக்குழந்தைக்கு காத்யாய்னி எனப்பெயரிட்டு சீறும் சிற்ப்புமாக வளர்த்தனர்.காத்யாயனிக்கு மணபருவம் நெருங்கியது. இதையுணர்ந்த்த முனிவர் பரம்பொருளை நோக்கி கடுந்தவம் புரிந்தார். முனிவரின் தவத்தால் அவர்முன் தோன்றிய இறைவனிடம்

எம்பெருமானே எம் மகளான காத்யாயினியை மணக்கோலத்தோடு வந்து திருமணம் புரிந்தருள வேண்டும் என வேண்ட இறைவனும் அப்படியே சித்திரை மாதத்தில் மக நட்சத்திரத்தில் திருமணம் புரிவோம் என கூறி மறைந்தார். இறைவன் கூறிய படியே சித்திரை மாதம் மக நட்சத்திரத்தன்று கயிலாயத்திலிருந்து தன் சிவ பூத கணங்களுடன் நந்தி தேவர் பிரம்மர் புடைசூல திருமணக்கோலமாய் சர்வாலங்காரத்துடன் இத்தலத்திற்கு எழுந்தருள காத்யாயன முனிவர் எதிர்கொண்டு வரவேற்க மகாவிமரிசையாக ஸ்ரீ கயிலாயநாதரும் காத்தியாயணி அம்பிகைக்கும் திருமண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. பின் திருவீதிவலம் வந்து ஆலயத்திற்குள் சென்றார்கள். அப்போது காத்யாயன முனிவருக்கு இவர் இறைவன். தானா என சந்தோகம். உடனே திருமால் அர்ப்பணித்த கண்மலரும் தொண்டர்மிழலைக் குறும்பார் நிவேதன விளங்கனியும் சோதிவடிவ மணக்கோல இறைவனின் திருவடிகளில் வந்து வீழ்ந்தது. அது கண்டு சந்தேகம் நீங்கிய காத்யாயனர் ஆன்ந்தக் கூத்தாடி பெருமானை வணங்கினார். அதுசமயம் திருமால் பிரம்மதேவர் காத்யாயணர் ரிஷிகள் முனிவர்கள் என அனைவரும் அம்மையும் அப்பனும் இதே திருமணக் கோலத்துடன் இங்கேயே வீற்றிருந்து அருள் பாலிக்க வேண்டும் என வேண்டி நிற்க அவ்வாறே இன்றும் திருவீழிமழலையில் இறைவன் திருக்கோலத்தில் மாப்பிள்ளை சுவாமியாக வீற்றிருக்கிறார்.

 

திருமணத்தடை - பரிகாரம்:

திருமணம் ஆகாத பெண்கள் இத்தலத்திற்கு வந்து கல்யாண சுந்தரேஸ்வரருக்கு மாலை அணிவித்து சுவாமிக்கும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) காலையில் எழுந்து நீராடி

தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப் பிரியாபாமினி
விவாக பாக்யம் ஆரோக்கியம்
புத்ரலாபம் சதேஹிமே
பதிம் தேவஹிசுதம் தேஹி
சௌபாக்யம் தேஹிமே சுபெ
சௌமாங்கல்யம் சுபம் ஞானம் தேஹிமே சிவ சுந்தரி
மகாயோக நிதீஸ்வரி
நந்த கோப சுதம் தேவம் பதிம்மே குருதே நம

எனும் சுலோகத்தை பக்தியோடு அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரரை ஒரு முகமாக நினைத்து கூறி வந்தால் விரைவில் திருமணம் கைகூடும் என இத்தலமான்மியம் கூறுகிறது.

 


 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon