குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

திருவலஞ்சுழி

இறைவன் : ஸ்ரீ கற்பகநாதேஸ்வரர்

இறைவி : பெரியநாயகி

தலவிருட்சம் : வில்வம்

தல தீர்த்தம் : காவிரி, அரிசொல் ஆறு, ஐடாதீர்த்தம்

என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
யிருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை
முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாயாரப்
பன்னியாதரித் தேத்தியும் பாடியும்
வழிபடு மதனாலே
-இரண்டாம் திருமுறை 106- ஆம் பதிகம்

கடையெழுவள்ளல்களில் ஒருவரான பேகனையும் மனத்துயரத்தால் பிரிந்திருந்த அவர் மனைவி கண்ணகியையும் சேர்த்து வைத்தவர் புலவர் அரிசில்கிழார். இவர் திருவலஞ்சுழிக் காரர். தேவாரப்பதிகங்கள் பெற்ற கோயில்கள் பலவும் அதித்தன் மற்றும் பராந்தகச் சோழன் காலத்தில் கற்றளிகளாக மாற்றப்பட்டன. இக்காலகற்றிளி (கருங்கள்) களும் திருவலஞ்சுழி கோயிலும் ஒன்று.

வெள்ளை விநாயகர்
விசேடமூர்த்தி-ஸ்ரீசுவேதவிநாயகர் (வெள்ளை விநாயகர்) கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் தஞ்சாவூர் செல்லும் பாதையில் இத்தலம் உள்ளது. சோழப்பெருவேந்தரின் தலைநகரமாம் பழையாறைக்கு மிக அருகில் அமைந்துள்ளஸ்தலம். சோழர் காலத்திலிருந்தே நகரச்சூழ்நிலையிலிருந்து விலகி சிற்றூராகவே காட்சியளிக்கும் இத்தலம் இயற்கை எழில் கொஞ்சும் இறைsயருள் ஸ்தலமாகத் திகழ்கிறது.

எங்கும் சோலைகள், நறுமணம் மிக்க மலர்கள், மல்களை நாடிவரும் வண்டுகளின் இனிய ஒலிகள், ஆற்றங்கரையில் இரை தேடும் குருகுகளும் பிளந்த வாயையுடைய நாரைகளும் கூட்டமாகக் காட்சியளித்தன.ஊரிலுள்ள பொய்கைகள் தாமரை பூத்துப்பொலிந்தன. அத்தாமரை மலர்களில் தாதுக்களில் அமர்ந்த அன்னங்கள் தம்மீது தாதுபடிந்த சுவட்டுன் பொடி மணலில் வந்து தங்கின. இவ்வாறு ஞான சம்பந்தரும் நாவுக்கரசரும் இத்தலத்தின் இயற்கை வளங்களை எடுத்தியம்பி நம்மையெல்லாம் இன்புறுத்துகின்றனர்.

வெள்ளை விநாயகர்
திருவலஞ்சுழியின் மிகச்சிறந்த பிரசித்தமாய் விளங்குகிறார் ஸ்ரீ சுவேத விநாயகர். கோயிலின் இராஜகோபுரத்திற்குள் நுழையும் போதே பலிபீடம் கொடி மரத்திற்கடுத்ததாய் ஒரு தனிக்கோயில். சிற்ப வேலைப் பாட்டில் நிகரற்றதாய் நுட்பமான வேலைத்திறன் கொண்ட கொடுங்கைகளும் கருங்கல் விளக்குகளும் மிகப்பெரிய கருங்கல் ஜன்னலும் நம்மை வியப்பிலாழ்த்தி வரவேற்கின்றன. சுயம்புவாய் அமைந்த சிவேத விநாயகர் தேவேந்திரனால் கடல்நுரையால் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையார் ஆனதால் வெண்மையாய் இருக்கிறார். இவ்வெள்ளை விநாயகருக்கு அபிஷேகம் கிடையாது? அதற்குபதில் பச்சைக்கற்பூரம் சார்த்துவர். சிவத்தலங்களிலேயே விநாயகருக்குறிய க்ஷேத்ரமாக திருவலஞ்சுழி கூறப்படுகிறது.
வலம்சுழித்த காவேரி
வழியெங்கும் தங்காது பொங்கி வந்த வளம் கொடுக்கும் சோழநாட்டுக் காவிரித்தாய் இத்தலம் வந்தவுடன் இறைவனை வளமாகச் சுற்றி வந்து அதன் மேல் செல்லாமல் ஆதிசேஷன் வெளிபட்ட பாதாளம் ஒன்றினுள் புகுந்துவிட்டாள். இதையறிந்த மன்னன் திகைத்தான். செய்வதறியாது இறைவனை வேண்ட அசரீரி ஒலித்தது. முற்றம் துறந்த முனிவரொருவர் பாதாளத்துள் குதித்து தம்மை பலியிட்டுக் கொண்டால் காவேரி வெளிப்படும். இதுகேட்ட மன்னன் அவ்வாறு முன் வருவார் எவரோ? என கலங்கி நின்றான் அப்போது குணமுடைய நல்லடியார் வாழ் கொண்டையூரிற் என்ற திருதாண்டகத்தின் படி அருகில் அமைந்துள்ள ஊரான திருக்கொண்டையூர் தவம் பிரிந்த ஏரண்ட முனிவர் அதனையறிந்தார்.

தம்மையே தியாகம் செய்ய முன்வந்தார். பாதாளத்தினுள் இறங்கினார். அடுத்த கணம் காவேரி வலஞ்சுழிந்து மேலே வந்தாள். இதன் காரணமாகவே இத்தலம் திருவலஞ்சுழி என்றானது. நாம் அவசியம் வணங்க வேண்டிய இக்கோயிலில் ஏராண்ட முனிவர் சிலை வடிவத்தில் காட்சியளிக்கிறார். வெள்ளை விநாயகர் நமது மனதையும் வெள்ளையாக்கி மனத்துன்பம் போக்கி தூயரத்தை அளிக்க வணங்குவோம்.

சிற்பச்செய்தி
தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில். சோழர் பெரு மன்னர்கள் காலத்தில் தமிழகம் ஏற்றம் பெற்ற ஒரு திருக்கோயில். இத்திருக்கோயிலின் முக மண்டபத்தில் பலி பீடத்தை ஒட்டி ஒரு விநாயகர் கோயில் உள்ளது. இது முற்றிலும் கலை அமிசத்தால் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய ஒன்றாகும். புதுமையாக உள்ள இக்கோயில் எடுக்கப்பட்டதன் காரணம் இம்மன்னன் காலத்தில் இவ்வூரில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளேயாகும். இந்த விநாயகர் கோயிலின் முன் மண்டபத்தில் உட்புறச் சுவரில் குலோத்துங்கனின் சிறிய உருவச்சிலை இறைவனை வணங்கும் கோலத்தில் உள்ளது. இதன் தோற்றம் மற்ற இடங்களிலுள்ள சிலைகளை ஒத்தே காணப்படுகிறது.

-குடவாயில் பாலசுப்பிரமணியன்

கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் தஞ்சாவூர் செல்லும் பாதையில் இத்தலம் உள்ளது

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon