குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

திருவைகாவூர்

இறைவன் : ஸ்ரீவில்வவனேஸ்வரர்

இறைவி : ஸர்வாஐனநாயகி, வளைக்கை நாயகி

தலதீர்த்தம் : யமதீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அக்கி தீர்த்தம்

தலமரம் : வில்வமரம்

கோழைமிட றாககவி கோளுமில
வாகவிசை கூடும் வகையில்
ஏழையடி யாரவர்கள் யாவை சொன
சொன்மகிழும் ஈசனிடமாம்
தாழையிள நீர் முதிய காய்கமுகின்
வீழநிரை தாறுசிதறி
வாழையிதிர் வீழ்கனிகள் ஊறிவயல்
சேறுசெயும் வைகாவிலே
-திருஞானசம்பந்தர்

தலம்.தீர்த்தம், மூர்த்தி ஆகிய மூவகைச் சிறப்புடன் விளங்கி வேறு எங்கும் இல்லாத வகையில் நந்திதேவர் கோயில் வாசலை நோக்கி திரும்பியிருக்கும் அதிசயத் தலம்
இதுவாகும். கோயிலுக்கு வருவோரை வருக வருக என அழைக்கும் விதத்தில் நந்திதேவர் திரும்பியிருப்பதற்கு ஒரு சிறப்புக்காரணம் உண்டு. அதுவானது திருவைகாவூர் கோயில் ஆழ்ந்த அமைதியில் இருந்தது. அதனுள் ஒரு முனிவர் சிவமே சவமாக ஆழ்ந்த தியானத்தில் லயித்திருந்தார். தடதடவென சப்தம். ஒரு மான் துள்ளி ஒடி வந்து கோயிலுக்குள் நுழைகிறது. அதைத் துரத்தி வருகிறான் ஒரு ஒரு வேடன். முனிவருக்கு தியானம் கலைகிறது. கண்விழித்தார். மானினைப்பார்த்தார். கண்களில் இருந்த பயம் முனிவருக்கு சகலமும் உணர்த்தியது மானைக்காப்பாற்ற உள்ளம் கொண்ட முனிவர் அதற்கு அடைக்கலம் தந்தார். துரத்தி வந்த வேடன் மினிவரிடம் மானை ஒப்படைக்குமாறு கேட்டான். அவர் மறுக்க கோபம் கொண்டான். மினிவரைத் தாக்கி விட்டு மானைக் கவர வில்லில் நாணேற்றினான்

அப்பொழுது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோயிலினுள் ஒரு உறுமல் சப்தம். வேடன் காதை கூர்மையாக்கிக் கேட்டான்.

அது ஒரு புலியின் உறுமல். திடீரென கர்ப்பகிரகத்திலிருந்து பாய்ந்து வந்த புலி. வேடன் ஓடினான், புலி துரத்தியது. வேடன் ஒரு வில்வமரத்தில் ஏறினான். கீழே பார்த்தான் புலி அவனுக்காக காத்திருந்தது. மாலை வந்தது இருட்டியது புலி நகரவேயில்லை. அதே இடத்தில் அப்படியே அவனுக்காக காத்திருந்தது. வேடன் செய்வதறியாது திகைத்தான். பசி கண்ணை இருட்டியது. மயக்கம் சுழற்றியது. வேடன் செய்வதறியாது திகைத்தான்.
பசி கண்ணை இருட்டியது. மயக்கம் சுழற்றியது. பயம் வந்தது. கீழே விழுந்து விட்டால் நேராக புலியின் வாய்க்குள் தான் போக வேண்டும். கூடாது விடியும் வரை சமாளிக்க வேண்டும் என்ன செய்வது. வில்வ இலைகளை ஒவ்வொன்றாக பிய்த்து கீழே போட்டான்.

அது புலியின் தலையில் சென்று விழுந்தது. இரவு முழுவதும் இது நடந்தது. அன்று இரவு மஹாசிவராத்திரி.

வேடன் உண்ணவில்லை, உறங்கவில்லை. வில்வ இலை பறித்து கீழே புலியின் மேல் போட்டுக் கொண்டிருந்தான். விடிந்தது புலிரூபம் மாறியது. அங்கே சாட்சாத் சிவன் காட்சி தந்தார். ஆனால் அன்று காலைதான வேடனின் ஆயுள் காலம் முடிகிறது. இயமன் பாசக்கயிற்றை வீசியப்படி வருகிறான். கோயிலுக்குள் நுலைகிறான். நந்திதேவர் இதனைக் கவனிக்கவில்லை. கோயிலுக்குள் நுழைந்துவிட்ட இயமனை சிவன் தட்சிணமூர்த்தியாக கோல் கொண்டு விரட்டி வேடனுக்கு மோட்சத்தை அளித்தார். இயமனை கோயிலுக்குள் நுழைய அனுமதித்த நந்திதேவர் மிது சிவனின் கோபம் திரும்பியது. நந்திதேவர் பயந்து வாசல் நோக்கி திரும்பி விடுகிறார். கின் தன் சுவாசத்தால் இயமனை நிறுத்தி விடுகிறார். இதன் காரணமாகவே நந்திதேவர் வாசல் நோக்கி திரும்பி இருக்கிறார்.

நிறுத்தப்பட்ட இயமன் சிவனிடம் வேண்ட பின் சிவனருளால் விடுபட்டான்.
இயமன் ஒரு தீர்த்தம் உண்டாக்கி நீராடி வழிபட அது யம தீர்த்தம் என்றானது. (ஆலயத்தின் எதிரில் உள்ளது) அக்னியின் தேயும் தன்மையை இவ்விறைவன் போக்கியருள அக்னி உண்டாக்கிய தீர்த்தம் அக்னி தீர்த்தம். ஆயத்தின் அக்னி மூலையில் உள்ள துடைப்புத் தொழிலை பெற பிரம்மன் ஒரிஉ தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டு படைப்புத் தொழிலைப் பெற்றார். அதுபிரம்ம தீர்த்தம். இவ்வாறு மூன்று தீர்த்தங்கள் பெற்ற சிறப்புடையது திருவைக்காவூர்.

ஊழிக்காலத்தில் அனைத்தும் அழிவதால் வேதங்கள் தாம் அழியாதிருக்க சிவனை வேண்ட சிவனின் ஆணைப்படி இத்தலத்தில் வில்வமரமாக நின்று வழிபடுவதால் இறைவனுக்கு வில்வாரண்யேஸ்வரர் பெயர் வந்ததாக புராணம் கூறுகிறது. ஒரு கற்புக்கரசியின் சாபம் நீங்க மஹாவிஷ்ணு இத்தலத்தில் தவம் செய்ததாகவும் எனவே இறைவனுக்கு அரியீசர் என்ற பெயரும் உண்டாயிற்று.
(ஆலயத்துவாரத்தில் பிரம்மனும்,விஷ்ணுவும் உள்ளனர்)

கும்பகோணத்திலிருந்து-திருவையாறு செல்லும் பாதையில் அண்டக்குடி என்ற இடத்தியிருந்து வடக்கில் 4மைல் தூரத்தில் திருவைகாவூர் ஸ்தலம் அமைந்துள்ளது


 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon