குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

திருவைகல்

இறைவன் : அருள்மிகு வைகல்நாதர்

இறைவி : அருள்மிகு வைகலாம்பிகை

தலவிருட்சம் : சண்பக மரம்

வேலோடும் மயிலாட அருள்புரியும் வேலவன் விளைந்திட்ட நெற்றிக் கண்ணுடைய விரிசடைக் கடவுள் மூன்று கண்களைவுடையவர். அந்த மூக்கண்ணனுக்கு மூன்று கோயில்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன ஆம்.

1.திருமால் பூசித்த விசுவநாதர் ஆலய்ம் (வலப்பக்கம்)
2.பிரம்மன் பூசித்த பிரம்மபுரீசர் ஆலயம் (நடுவில்)
3.வைகல்நாதர் குடி கொண்டுள்ள ஆலயம்(இடப்பக்கம்)

இப்படி ஒரே இடத்தில் அமைந்த மாடக் கோயிலாக விளங்குகிறது. கோச் செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்று. மூலவர் சுயம்பு மூர்த்தியாவார்.

திருமால் தன்னை மணம் புரிய பூமிதேவி வேண்ட அவரோ நிலமகளை மணம் புரிந்துவிட்டார். சினம் கொண்ட பூமிதேவி இத்தலம் வந்தடைந்து. சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிகிறாள். அப்போது பூமிதேவியைத் தேடி திருமாலும்,திருமாலைத் தேடி பிரம்ம தேவரும் இத்தலம் வந்து வைகலநாதரை வழிபட்டனர். பின் எம்பெருமான் சிவபெருமான் அருலாள் திருமால் திருமகளையும், பூமிதேவியையும் மனைவியாக அடைந்த தலம் திருவைகல்

முற்கலத்தில் இத்தலம் செண்பக மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் செண்பகவனம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தலத்தை சூரியன், தேவர்கள், அகஸ்தியர் ஆகியோரும் வழிப்பட்டுள்ளனர். திருமால் தனது இரு தேவியருடனும் காட்சியளிக்கிறார்.

அனைவரும் காணவேண்டிய அற்புதத்தலம். கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் பழியஞ்சிய நல்லூரில் (குட்டைக்கரை) இருந்து தெற்கே 1கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.

 


 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon