குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

திருத்தண்டிகை புரம்
(எஸ்.புதூர்)

இறைவன் : ஸ்ரீசனத்குமாரேஸ்வரர்

இறைவி : ஸ்ரீசௌந்தர்ய நாயகி

தலவிருட்சம் : பலா மரம்

தலதீர்த்தம் : சோமதீர்த்தம்

குபேரன் வழிப்பட்ட குபேரஸ்தலம்
கும்பகோணத்திருந்து 18கி.மீ. தொலைவில் கிழக்கே திருநள்ளாறு செல்லும் வழியில் அமைந்துள்ளது. திருத்தண்டிகைபுரம் (தற்போது எஸ்.புதூர்) என அழைக்கப்படுவதற்கான காரணம் ஐந்து ஊர்களுக்குப் பொதுவாகி பொது ஊர் என்றாகி பின் வழக்கில் புதூர் (எஸ்.புதூர்) என அழைக்கப்படுகிறது. ஒரு சமயம் குபேரன் மன சபலத்தினால் தவறு செய்ய தர்மம் அவனை விட்டு நீங்கியது. எனவே அஷ்ட ஐஸ்வரியங்களும் அவனை விட்டு நீங்கியது. செல்வங்களை இழந்து தன் தவறை எண்ணி வருந்திய குபேரன் சப்தரிஷிகளிடம் உபாயம் கேட்க அவர்கள் குபேரனுக்கு கை நீட்டிக் காட்டிய இடம்தான் திருத்தண்டிகைபுரம். (எஸ்.புதூர்)

இத்திருத்தலத்தில் உள்ள சோமதீர்த்தத்தில் நீராடி இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீசனத்குமாரேஸ்வரரையும் அன்னை ஸ்ரீசௌந்தர்யநாயகியையும் தரிசித்து சரணடையும் படி ரிஷிகள் கூற அவ்வாறே செய்து இத்தல இறைவனின் அருளால் இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றான் குபேரன். எனவே செல்வமிழந்தோர் இத்தலம் வந்து சோமத்தீர்த்தத்தில் மாசிமாத நன்னாளில் நீராடி வழிபட இழந்த செல்வங்களை மீண்டும் அடைவர்.

200 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்ட இத்திருக்கோயிலில் 12 ராசிகளையும் பீடமாக அமைந்த அதில் அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீ குருதட்சிணாமூர்த்தி அமைந்து குருவினால் ஏற்படும் குறைகளைக் களைந்து அருள் பாலிக்கிறார். இக்கோயிலின் தலவிருச்சமான பலாமரத்தில் இரண்டு பலாப் பழங்கள் சிவலிங்க வடிவத்தில் காய்த்துள்ளது அதியமான நிகழ்ச்சியாகும்.

 


 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon