குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

திருப்புறம்பியம்

இறைவன் : சாட்சிநாதர்

இறைவி : கடும்படுசொல்லி

தீர்த்தம் : புன்னை

மறம்பயமலை ந்தவர் மதிற்பரிசறுத்தனை
நிறம்பசுமை செம்மையொடுசை ந்துனது நீர்மை
திரும்பயனுறும் பொருளை தெரிந்துணருநால்வர்க்
கறம்பனுரைத்தனை புறம்பாயமமர்ந்தோய்
-திருஞானசம்பந்தர்

கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக்
குமரனும் விக்கின விநாய கன்னும்
பூவாய் பீடத்து மேலயன்னும்
பூமி யளந்தானும் போற்றி சைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடி யாடிப்
பாரிடமுந் தாமும் பரந்து பற்றியப்
பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப்
புறம்பயம் நம் மூரென்று போயி னாரே
-திருஞானசம்பந்தர்

பாடல் ஸ்தலம்
சைவ சமயகுரவர் நால்வராலும் பாடப்பெற்ற பெருமையும் பழமையும் வாய்ந்தது.
சேக்கிழாரின் திருதொண்டர் புராணம் திங்கள் சூடிய செல்வர் மேவு திருப்புறம்பயம்
என்று புகழப்படுகிறது. சோழர்களின் கட்டிடக்கலைக்குச் சான்று பகரும் இக்கோயிலின் ராஜகோபுரத்தை விட கருவரை விமானம் உயர்தோங்கி காணப்படுகிறது. இக்கற்றளி கி.பி.870முதல்907 வரை தஞ்சையை ஆட்சி புரிந்த முதலாம் ஆதித்தசோழனால் கட்டப்பட்டது.

பிரளயங்காத்த விநாயகர்
இராகு இத்தலத்தில் ஏற்பட்ட ஒரு பிரளயம் சிவபெருமானின் ஆணைப்படி விநாயகரால் அடக்கப்பெற்றது. எனவே இத்தல விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் எனப்படுகிறார். இவ்விநாயகருக்கு தேனாகிஷேகம் செய்தாலும் அவ்வளவும் விநாயகரின் திருமேனிக்குள் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இந்நிகழ்ச்சி இக்கோயிலின் மிகப்பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

சாட்சிநாதர்
பூம்புகாரிலிருந்து மதுரைக்குச் சென்ற வணிகன் ஒருவன் நாகம் தீண்டி இறந்துவிட அவனோடு சென்ற ஒரு பெண்ணின் வேண்டுக்கோளுக்கிணங்க புயம்பயத்தெம் பெருமான் வணிகனுக்கு உயிரளித்ததோடு அவ்விருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். பிறகு மதுரையில் அவ்வணிகனின் முதல் மனைவி அப்பெண்னை இழிவாகப் பேசி விரட்ட முற்பட அப்பெண்ணுக்கு சாட்சியாக வண்னிமரம்,கிணறு,மடைப்பள்ளியோடு புயம்பயத்தபெருமான் சாட்சி கூறி உண்மையை உணர்த்தினார். எனவே இத்தல இறைவன் சாட்சிநாதர் ஆவார்.


 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon