குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

திருப்பனந்தாள்

இறைவன் : அருள்மிகு செஞ்சடையப்பர்

இறைவி : அருள்மிகு பெரியநாயகி

தலவிருட்சம் : பனைமரம்

தலதீர்த்தம் : இத்தலத்தை வழிப்பட்டோர் ஒவ்வோருவரின்

பெயரிலும் தீர்த்தம் உள்ளது

தலவிருட்சத்தின் பெயரலேயே அமைந்த தலம் திருப்பனந்தாள். அதாவது பனைமரத்தை தலவிருட்சமாகக் கொண்ட தலம் இது கோயிலின் பிரகாரத்தில் தெய்வப்பனை மரங்கள் இரண்டு உள்ளன. அவ்வாறே பனையின் பெயரால் ஆகி திருப்பனந்தாள் என்றானது.

தன்பொழில் சூழ் திருப்பனந்தாள்
-திருஞானசம்பந்தர்

இத்தல இறைவன் சடாமுடியின் பெயரல் சஞ்சடையப்பர் என்று அழைக்கபடுகிறார். இவர் சுயம்பு மூர்த்தி கலைநயம் வாய்ந்த இத்திருகோயிலில் ஈசன் மேற்கு நோக்கியும் அம்பாள் கிழக்கு நோக்கியும் எழுந்தருளியிருக்கிறார்கள்

புராணவரலாறு
பனந்தாள் தலத்தில் தாடகை என்ற அசுரகுலமங்கை மலர்கொய்து மாலைக் கட்டி தொண்டு புரிந்து வந்தாள். ஒருநாள் மாலையை இறைவனுக்கு அணிவிக்க முயல அப்போது அவளின் சேலை நழுவ அதனை முழுங்கையால் அழுத்திக்கொண்டு எக்கி மாலை அணிவிக்க முயல அப்போது தாடகையின் சங்கடத்தை தீர்க்க வசதியாகத்தானே தலைசய்த்து மாலையை ஏற்றுக்கொண்டார் இறைவன். எனவே இக்கோயிலுக்கு தாடகையேச்சரம் என்ற பெயர்.

வழிப்படோர்
திருமால்,பிரம்மன்,இந்திரன்,ஐராவதம்,ஆதிசேடன், அகத்தியர் ஆகியோர் இத்தலம் வந்து வழிப்பட்டு அருள் பெற்றுள்ளனர். இவர்களின் பெயரில் தீர்த்தங்களும் உள்ளன. நாகக்கன்னியர் வந்த வழிப்பட்டதாகச் சொல்லபடும் பிலம் (பாதாளம்) கோயில் பிரகாரத்தில் கிணறு வடிவில் உள்ளது.

குங்கிலியக்கலய நாயனார்
63 நாயன்மார்களில் ஒருவர் குங்கிலியக்கலய நாயனார். குங்கிலியம் சாம்பிராணி இறைவனுக்கு சாம்பிராணிப் புகைப்போட்டு வழிப்படுவதில் மிகுந்த விருப்பம் உடையவர் ஆகையால் குங்கிலியக்கலய நாயனார் என்று அழைக்கப்பட்டார்.

தாடைகைக்காக வளைந்த இறைவனின் தலை பின்பு வளைவை நிமிர்த்தாமலேயே இருந்திருக்கின்றார். இதனால் அப்போது ஆட்சி புரிந்த மணிமுடிச் சோழன் மிகவும் மனம் வருத்தமுற்று சாய்ந்திருக்கும் பெருமானை நிகிர்த்திவைக்க பெரும் முயற்சிகொண்டார். யானைக்கட்டி இழுக்கவைத்து லிங்கத்தை நிமிர்த்த முயற்சித்தார்.என்ன் அதிசயம் யானை,குதிரை என எப்பேர்பட்ட முயற்சியாலும் லிங்கத்தின் பாணத்தை நிமிர்த்த முயற்சித்தும் முடியவில்லை. இறுதியில் திருக்கடவூரிலிருந்து குங்கிலியக்கலய நாயனார் வந்து தம் கழுத்தில் கயிற்றை கட்டிக்கொண்டு ஒன்று இறைவன் நிமிரவேண்டும் இல்லை தம் உயிர் போக வேண்டும் என இறைவனிடம் முறையிட்டு விட்டு இழுக்க மிக எளிதாக இறைவன் நிமிர்ந்து அருளியிருக்கிறார். தம் பக்தர் இருவரின் அன்புக்கு கட்டுப்பட்டு இறைவன் சாய்ந்தும்,நிமிர்ந்தும் அருளியுள்ள தலம்.

ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் இத்தலத்தில் உள்ளது. திருஞான சம்பந்தரை மதுரைக்கு வரவழைத்து சமணர்களை வென்று சைவநெறி தழைத்தோங்கச்செய்த நின்ற சீர் நெடும் பாண்டியனின் மனைவியான மங்கையர்க்கரசியாரின் தந்தையார் தாம் ம்ணிமுடிச்சோழன்

கும்ப்கோணத்திலிருந்து வடக்கே சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பனந்தாள்.

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon