குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

திருபாலத்துறை இறைவன் : ஸ்ரீ பாலைவனநாதர்

இறைவி : தவளம்பாள்

தலவிருட்சம் : பாலைச்செடி

தலதீர்த்தம் : வசிஷ்டதீர்த்தம், இந்திர தீர்த்தம், இயம தீர்த்தம்

விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும்
மண்ணினார் மறவாது சிவாய என்று
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணினார் அவர் பாலைத்துறையிரே
-அப்பர்
கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் பாபநாசத்திற்ற்கு முந்தைய பேருந்து நிறுத்தும் தான் தவளம்பாள் கோயில். திருபாலத்துறையில் இக்கோயிலுக்கு அப்படித்தான் பெயர்.

பாலைவனநாதர்
இத்தலத்தில் முன்னொரு காலத்தில் எங்கும் பாலைச்செடி எனும் ஒரு படர்செடி காடாக மண்டியிருந்திருக்கிறது. இதனால் இவ்விடம் பாலைவனம் என அழைக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய வனத்தில் தாருகா வேள்வியிலிருந்து பயங்கரப் புலியொன்று பாய்ந்து வந்தது தாருக முனிவர்கள் இறைவன் மீது ஏவிவிட புலி இறைவனின் மீது பாய்ந்தது. சர்வ சக்தியும் கொண்ட எம்பெருமான் அப்புலியை வென்று அதன் தோலை உரிந்து ஆடையாக உடுத்தி கொண்டு நடனம் புரிந்த ஸ்தலம். இந்த பாலைவனத்து நாயகராகிய தால் இறைவனுக்கு பாலைவன நாதர் என்று பெயர்.

 

நெற்களஞ்சியம்
இக்கோயிலில் மிகப்பழமையான ஒரு நெற்களஞ்சியம் உள்ளது. சுமார் பன்னிரெண்டாயிரம் கலம் நெல்லை கொள்ளும் அளவு மிகப்பெரியது. முழுமையும் செங்கல்லால் கட்டப்பட்ட வட்டவடிவாய் அமைந்துள்ளது. மேற்பகுதி கூம்பாக குவிந்துள்ளது.

புராண வரலாற்று சிறப்புடைய இக்கோயிலை நாம் கண்டுகளிப்பது வரலாற்றுக்கு நாம் செய்யும் ஒரு மரியாதையே ஆகும்.கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் பாபநாசத்திற்கு முந்தைய பேருந்து நிறுத்தத்தில் உள்ளது இக்கோயில்.

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon