குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

 

திருந்துதேவன்குடி

இறைவன் : கங்கடேஸ்வரர்

இறைவி : அருமருந்தம்மை அபூர்வநாயகி

தீர்த்தம் : பங்கய தீர்த்தம்

 

சீவன் குடியற வீச்சீர் நகரோன்றே யெனுஞ் சீர்த்தேவங்குடி என்று வள்ளலார் பாடுகிறார்.
இத்தலம் நண்டு வழிபட்ட தலம். ஆடி மாத அமாவாசையில் பூர நட்சத்திரம் கூடிய நாளில் இரவில் 21 குடம் காராம் பசு பால் அபிஷேகம் செய்யும்போது சிவலிங்கத்திருமேனியில் மேற்பகுதியில் உள்ள துவாரத்திலிருந்து ஒரு பொன்னிறமுடைய நண்டு வெளிவந்து காட்சியளிக்கும் என்று வசிஸ்ட மகாத்மியம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரு புராணக் கதை உள்ளது.

இந்திரனுடைய சாபத்தால் ஒரு கந்தவர்வன் பூமியில் நண்டாக திருந்து தேவங்குடி வந்து இத்தல புண்ணிய தீர்த்தத்தில் இருந்த தாமரை மலரை காம்போடு வெட்டிக் கவ்விக் கொண்டு கோமுகம் வழியாக சென்று சிவலிங்கத்தின் மீது சார்த்தி வழிபட்டு வந்தது. இது இரவில் நடைபெற்று வந்தது. சாபமிட்டு இந்திரனும் தன் தவ வலினையை பெருக்கிக்கொள்ள தினமும் காலையில் தீர்த்தத்தில் பூத்த ஆயிரத்தெட்டு தாமரை மலர்களை இறைவனுக்கு சார்த்தி பூசித்துவந்தான். அவ்வாறு இருக்க தினமும் தன் பூசைக்கு முன்னரே ஒரு தாமரை மலர் இறைவன் மேல் இருக்கக் கண்டு தனக்கு முன் பூசை செய்வது யார் எனக் கண்காணித்தான், ஒருநாள் இரவில் தீர்த்தத்தில் ஒரே ஒரு தாமரை மட்டும் தண்ணீரில் மூழுகக்கண்டான். காற்றுக் குமிழிகள் வெளிவர மெல்ல நகரக் கண்டான். கோமுக துவாரம் வழியே கோயிலினுள் சென்றது. இந்திரனும் கோயிலினூள் சென்று பார்க்க அத்தாமரை மலர் இறைவன் மேல் இருக்கக் கண்டான்.

அப்போது இறைவனின் அசரீரி ஒலித்தது. இந்திரேனே உன்னால் சாபம் பெற்ற கந்தவர்வனே நண்டு வடிவில் என்னை பூசித்து வருகிறான். உன்னை இங்கு கண்டவுடன் பயந்து என் திருமேனியில் ஒளிந்திருக்கிறான். யாமும் அவனுக்கு அபயம் அளித்து அவனது பெயராலேயே கற்கடேஸ்வரர் (கற்கடம்-நண்டு) என்ற பெயரைப் பெற்றோம் என்று கூறி காட்சியளித்து அருளினார் என்பது புராணக்கதை எனவே இக்கோயில் நண்டாங்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலுக்கு 6.7.2003 அன்று சிறப்பாக கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. முதல் நாள் யாக பூஜையில் யாககுண்டத்தை ஒரு நண்டு சுற்றிவலம் வந்தது நேரில் கண்ட அதிசயக்காட்சியாகும்.

இக்கோயிலை தெற்காசியாவையே ஆண்ட முதல் இராஜேந்திர சோழன் கட்டியுள்ளான்.இக்கோயில் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. சிறப்பானவேலைபாடாக மூலவர் விமானமும் கருகல்லாலேயே அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அதிசயதிருபணியாகும். சுதை வேலைபாடு போன்று கருங்கல்லில் வளைவோடு கூடிய அமைப்பும், மிக அதிக பளுவை தாங்கும் வகையிலும் ஆயிரக்கணக்கான வருடங்களாக எழும்பியிருக்கும் மிகசிறப்பான கோயில்

இக்கோயிலின் வெளிசுவற்றில் ஒரு வைத்தியர் மருந்து செய்வது போன்றும் ஒரு தேரில் அரசன் ஒருவன் இலிங்கத்திருமேனியை நோக்கி வருவது போன்றும் புடைப்புச் சிறபமாக அமைந்துள்ளது. இத்தல இறைவி உடல் நோயை நீக்கும் கருத்துவராக அருமருந்து அம்மையராக விளங்குகிறாள். அம்மனுக்கு சார்த்தி தரப்படும எண்ணெய் அருமருந்தாக கருதப்படுகிறது. முக்கியமாக புற்றுநோயைநீக்கும் தல்ம் என்று கூறப்படுகிறது.

இக்கோயிலின் வெளிபுறச்சுவற்றில் மேலேயுள்ள சிற்பத்திற்கு அருகிலேயே இராஜேந்திரசோழனும் அவனது தேவியும் வணங்குவது போன்று புடைப்புஸ் சிறபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி அகழி அருந்தற்கான நில அமைப்பு உள்ளது. தற்போது அதில் ஒரு திருவிசநல்லூர் கோயிலிருந்து வடக்கே 3.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.

 

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon