குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

திருநீலக்குடி

இறைவன் : நீலகண்டேஸ்வரர்

இறைவி : உமையம்மை

இத்தலம் எமபயம் போக்கும் தலமாகும். இத்தல இறைவனுக்கு எண்ணெய் முழுக்காட்டும் போது எண்ணை முழுவதும் இலிங்கத்திலேயே உறிஞ்சப்பட்டுவிடும். இது நாம் காணவேண்டிய அதி அற்புதத் தலமாகும். மேலும் உமையம்மை இங்கு இருநிலைகளில் உள்ளள். தவம் செய்கின்ற கோலத்திலும் மணம் செய்கின்ற மணப்பெண்ணாகவும் அடுத்தடுத்த சந்திகளில் அருள்பாளித்துக் கொண்டிருக்கிறாள் அம்பாள்.

திருநாவுக்கரசர் பாடியுள்ள தலம். திருப்பாற்கடலில் தேவர்களும் அரசர்களும் அமுதம் கடைந்த போது வெளிப்பட்ட கொடிய நஞ்சை தாமுணடார் சிவபெருமான். அப்போது நஞ்சு உள்ளுக்குள் சென்று விடாமல் அருகிலிருந்த பார்வதி தேவியார் கழுத்தை(கண்டம்) பிடிக்க நஞ்சு கண்டத்திலேயே நின்றது. கொடிய நஞ்சின் காரணமாய் கணடம் நீலமானது. இதனால் நீலகண்டர் எனப் பெயர் பெற்றார் சிவபெருமான்.

இராகு தோஷம் நீங்கும்
இராகு தோஷமுடையவர்கலள் இத்தலம் வந்து வழிப்படுவது சிறந்தது. இத்தலத்தில் ஏழுர்விழா மிகவும் சிறப்புடையது. அப்போது சுவாமி இலந்துறை ஏனாதிமங்கலம்திருநாகேஸ்வரம் திருபுவனம் திருவிடைமருதூர் மருத்துவக்குடி ஆகிய ஊர்களுக்குச் செல்வது வழக்கம். விழா நாட்களில் சுவாமி எழுந்தருளும் போது சுவாமிக்கு எதிர் முகமாக மார்க்கண்டேயர் செல்லும் காட்சி காணசிறப்புடையது.

கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தூரத்தில் காரைக்கால் செல்லும் வழியில் உள்ளது திருநீலக்குடி.

 


 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon