குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

திருலோக்கி

இறைவன் : அருள்மிகு சுந்தரேஸ்வரர்

இறைவி : அருள்மிகு அகிலாண்டேஸ்வரி

தல்விருட்சம் : சரக்கொன்றை

தலதீர்த்தம் : இலட்சுமி தீர்த்தம்

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை எழுப்பிய முதலாம் இராஜராஜசோழனின் மனைவி திரைலோக்கிய மாதேவியின் பெயரில் நிர்மாணிக்கப்பட்டதே இவ்வூர். திரைலோக்கிய மாதேவி சதுர்வேதி மங்களம் என அழைக்கப்பட்டத. பின்னர் காலத்தால் மருவி இப்போது திருலோக்கி என்றழைக்கப்படுகிறது. அழகு மிளிரத் தோற்றமளிக்கும் சிவலிங்க வ்டிவில் கருவறை மூலவராக வீற்றிருக்கிறார். ஸ்ரீ சுந்தரேஸ்வரர். இவரை கருவூர்த் தேவர் தனது திருவிசைப் பாக்களில் திரைலோக்கிய சுந்தரம் எனப் பாடி வழிப்பட்டுள்ளார்.

 

இழந்த கணவனை மீண்டும் அடையலாம்
தன்னிடம் முறைதவறி நடந்த மன்மதனை நெற்றிக்கண்ணால் எரிந்து சாம்பலாக்கினார் சிவபெருமான். இதைக்கண்ட இரதிதேவி கதறியழுது தன் கணவனுக்கு உயிர்பிச்சையளிக்க வேண்டுமென இறைவனிடம் வேண்டினாள். கருணையே வடிவான சிவபெருமான் இரதிதேவியிடம் திரைலோக்கி சென்று அத்தலத்தில் சுந்தரேஸ்வரரை வழிபடுமாறு பணிக்க அவ்வாறே வழிபட்டு இரதி தேவி மீண்டும் மன்மதனையடைந்தாள்.

மனமதனை எறிந்த இடம் திருகொற்கை.மீண்டும் மன்மதன் உயிர்ப்பெற்றெழுந்தது திருலோக்கி ஆகும்.

 

குருபகவானுக்கு பாபவிமோசனம்
திருவிடைமருதூரில் எழுந்தடுளியுள்ள மகாலிங்க சுவாமியை குருபகவான் வழிபட்ட போது இறைவன் குரு பகவானின் பாவம் நீங்க தனக்கு ஈசான்ய திசையிலமைந்த திரைலோக்கிய சுந்தரரை வழிபட்டால் பாப விமோசனம் கிடைக்கும் என்று கூறினார். குருபகாவானும் திரைலோக்கி வந்து தவம் செய்தார். அதன் பலனாக மார்கழி திருவாதிரை நாளில் தேவர்களும், பூதகணங்களும் புடைசூழ ரியஷபாரூடராகசுந்தரேஸ்வரர் அகிலாண்டேஸ் வரியை ஆலிங்கணம் செய்தவாறு தரிசனம் தந்து பாபவிமோசனமளித்ததாக புராணத்தில் கூறப்படுகிறது. இன்றும் இத்தலக் கோயிலில் ரிஷபாரூடரிடம் பாபவிமோசனம் பெற்ற குருபகவான் இருகரம் கூப்பிய நிலையில் வழிபட்டு நிற்பதை காணலாம் ரிஷபவாகனத்தில் ரிஷாபரூடர் சிற்பம் ஓரே கல்லில் செதுக்கப்பட்டு வேறு எத்தலத்திலும் காணமுடியாத சிறப்புடையது. திருமணத்தடையுள்ளவர்கள் இத்தல ரிஷபரூடரை வழிபட்டால் தடைநீங்கி விரைவில் திருமணம் கைகூடும். பிருகு முனிவர்கள் தேவகுரு,பிரகஸ்பதி, சுகேது,இரதிதேவி, கருவூத்தேவர், தருமன் ஆகியோர் இத்தலத்தை வழிபட்டோராவர்.

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon