குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

திருக்கலய நல்லூர்
(சாக்கோட்டை)

இறைவன் : அருள்மிகு அமிர்தகலசநாதர்

இறைவி : அருள்மிகு அமிர்தவல்லி

அமிர்த கலயமே சிவலிங்கமானது
குருமுலை மவர்க்குழலி கொண்டதவம் கண்டு
குறிப்பினொடு சென்றவள்தன் குணத்தினை நன்கறிந்து
விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியூர் வினவில்
அரும்பருதே கரும்பருவ அறுபதம் பண்பாட
அணிமயில்கள் நடமாடு மணிபொழில் சூழயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே
-சுந்தரர்

 

பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த பிரம்மன் செய்த அமிர்தகலயம் இங்கே தங்கியது. கலயம் தங்கிய காரணத்தால் இவ்வூர் திருக்கலயநல்லூர் என்றானது. அமிர்தம் நிரம்பியிருந்த கலயமே சிவலிங்கமாக மாறியதால் இறைவன் அமிர்தகலசநாதராகவும்,இறைவி அமிர்தவல்லியாகவும் வீற்றிருந்து அருள் பாலித்து வருகின்றனர்.

 

இத்தலம் சைவசமயக்குரவர் நால்வருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்றுள்ளது. தாள்புணலும் வெண்மதியமும் தங்கிய செஞ்சடையன் என் இத்தல இறைவனைப் போற்றிப்பரவிய சுந்தரர் கலயநல்லூரை நினைத்தாலே அல்லும் பாவமும் தொலையும் என்கிறார். இவ்வூருக்கு தற்போது சாக்கோட்டை என்று பெயர் இதற்குக் காரணமாக ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

 

அதாவது முன்னொரு காலத்தில் இவ்விடத்தில் சாக்கியர் (பௌத்தர்) வாழ்திருந்தாகவும் அவர்களுக்கென ஒரு கோட்டை கட்டி வழ்ந்ததாகவும் அதனால் சாக்கியர் கோட்டை என்று வழங்கி பின்னர் காலப்போக்கில் சாக்கோட்டை என மருவிவிட்டது. சாவாக் கோட்டை என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இத்தல இறைவானை வணங்கி வருவோர்க்கு சாவு வராது. ஊயிர் பறிக்க வரும் இயமனிடமிருந்து காப்பாற்றும் கோட்டையாக விளங்கி சாவாக்கோட்டை என்பது நாளடைவில் சாக்கோட்டையானது என்று கூறுவோறும் உண்டு.

 

ஆயினும் கோயில் நகரமாம் கும்பகோணத்திற்க்கு மிக அருகில் மிகப்பழமையான கோயிலாக விளங்கும் திருக்கலையநல்லூர் (சாக்கோட்டை) அன்பர்கள் காணவேண்டிய அற்புதத்தலமாகும்.


 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon