குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

திருமீயச்சூர்

இறைவன் : அருள்மிகு மேகநாதசுவாமி
இறைவி : அருள்மிகு சாந்தநாயகி அம்மாள்
தலவிருட்சம் : மந்தார மரம்
தலதீர்த்தம் : சூரிய புஷ்கரணி காளி தீர்த்தம்


காயச் செல்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புண் கடையிற் பதித்து பரமேட்டி
மாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதான்
மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே
-திருஞானசம்பந்தர்

 

 

ஒரே ஆலயத்துள் இருகோயில்கள் அமைந்திருப்பது தெரியுமா? ஆம் இத்தலத்தில் திருமீயச்சூர் திருக்கோயிலும். திருமீயச்சூர் இளங்கோயிலும் ஒரே ஆலயத்துள் அமைந்துள்ளன. இறைவனை திருஞானசம்பந்தரும் திருமீயச்சூர் இளங்கோயிலே என திருநாவுக்கரசரும் பாடிப் பரவியுள்ளனர். சோழர் காலக் கற்கோயிலாக கலையழகு கொஞ்சும் சிற்பங்களுடன் கஜப்பிருஷ்ட விமான அமைப்புடையது இத்திருக்கோயில்.

சோழர் திருப்பணியோடு புராணசிறப்பும் கொண்டு உலகின் அனைத்து நன்மைகளையும் அருளும் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை ராஜதர்பார் நடத்தும் அழகு கண்கொள்ளாக் காட்சியாகும்.

கருடனும்- அருணனும் பிறந்த கதை
காசிப முனிவரின் பத்தினிக்கான கர்த்துரு, விநதை இருவரும் ஐலக்கிரீடை (தண்ணிரிருக்கடியில் தவம் செய்தல்) செய்யும் போது தேவேந்திரன் குதிரை எ எ எ எ எ எ எ கரையில் மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து வர்ணித்தனர். அப்போது அக்குதிரை தூரத்தில் சென்று மறைந்து விட்டது. கர்த்துரு, விநதனிடம் குதிரையின் மேல் கருநிறப்புள்ளி திருஷ்டிப் பரிகாரமாக உள்ளது என்று கூறினாள். நான் பார்த்தப் போது இல்லையே என்று விநதை கூற கர்த்தருவுக்கு கோபம் வந்து விடுகிறது.

 

நாளை மீண்டும் நாம் இங்கு வருவோம். அக்குதிரையின் மேல் கருநிறப்புள்ளி இல்லையெனில் நான் உனக்கு அடிமை இருந்தால் நீ எமக்கு அடிமை என்று கூற விநதயும் ஒத்துக்கொண்டாள். பின் கர்த்தரு தன் பிள்ளைகளாகிய 12 பாம்புகளையும் அழைத்து குதிரையைக்கடித்து கருநிறப்புள்ளியை உண்டாக்குமாறு ஆணையிட

அவைகளும் அவ்வாறே செய்தன.மறுநாள் குதிரையின் மேல் கருமை நிறப்புள்ளியைக் கண்ட விநதை இது கர்த்தருவின் சூழ்ச்சி என்பதைறிந்து அவளை விட்டுப் பிரிந்து மீயச்சூர் என்ற இத்தலம் வந்து மந்தார மரத்தினடியில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தாள்.

 

தன் தவறுணர்ந்து கர்த்தரு விநதயைத் தேடி வந்து தன் பிள்ளைகளான பாப்புகளோடு சுவாமியை வழிப்படுகிறாள். இவர்களின் பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் தரிசனம் தந்து ஆளுக்கொரு அண்டம் (முட்டையை) கொடுத்து இதை ஒரு வருடம் பூஜித்து பாதுகாத்து வந்தால், உலகம் பிரகாசிக்கும் புத்திரன் பிறப்பான் எனக்கூறி மறைந்தார். அவர்களும் அவ்வாறே செய்தனர், ஒரு வருடம் கழித்து விநதையின் அண்டத்திலிருந்து ஒரு பட்சி பிறந்தது. உடனே விநதை இறைவா என்ன இது பறவை பிறந்துள்ளதே என வேண்ட இறைவன் தோன்றி ஆம் இவன் தான் மஹாவிஷ்ணுவின் வாகனமாகி கருட பகவான் என்ற பெயரில் பிரகாசிப்பான் என்று அருளினார். விநதை குழந்தை பிறந்து விட்டதே என்ற ஏக்கத்தில் கர்த்துரு தான் பாதுகாத்துப் பூஜித்து வந்த அண்டத்தை உடைக்க தலைமுதல் இடுப்பு வரை மட்டுமே வளர்ந்த அங்கஹீனமாய் ஒரு குழந்தை பிறந்தது. கர்த்துருவும் இறைவனை வேண்ட இவன் அருணன் என்ற பெயருடன் சூரியனுக்குச் சாரதியாய் இருந்து உலகம் முழுவதும் பிரகாசிப்பான் என்று அருளினார்.

லலீதா சகஸ்ரநாம பூஜை
இங்கு லலீதாம்பிகை அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது காண்பவர் மனம் மயங்கும் கண்கொள்ளாக் காட்சியாகும். ஸ்ரீஹயக்ரீவரிடம் லலீதா சகஸ்ராம உபதேசம் பெற்ற அகஸ்தியர் லலீதம்பாளை எங்கு தரிசிக்கலாம்? என்று கேட்க திருமீயச்சூர் செல் என்றார் ஸ்ரீ ஹ யக்ரீவர். மேலும் லலீதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் முழுபலனையும் திருமீயச்சூரில் வாசிப்பதினால் பெறலாம் என்றார். அகத்தியரும் திருமீயச்சூர் வந்து லலீதாம்பாளை வணங்கி லலிதாசகஸ்ர நாமம் படித்து பூரண அருள் பெற்றார்.

தோற்றுங் கோயிலுங் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சசூர்க்
கூற்றம் பாய்ந்து குளிர்புன் சடையரற்
கேற்றங் கோயில் கண் டீரிளங் கோயிலே
-திருநாவுக்கரசர்

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon