குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 


திலதர்ப்பணபுரி

இறைவன் : அருள்மிகு முக்தீஸ்வரர்

இறைவி : அருள்மிகு சுவர்ணவல்லி

வினாயகர் இல்லாமல் விஷேசமா? சாத்தியமே இல்லை. எந்தவொரு நிகழ்ச்சியானாலும் முதலில் வழிபடுவது வினாயகரையே. இந்த வினாயக்கருக்குத் தான் எத்தனை வடிவங்கள். இருந்தாலும் யானை முக விநாயகர் தான் நமக்கு நன்கு தெரிந்தவர். ஆனால் நம்மை போன்றே மனிதமுகம் கொண்ட விநாயகரை தரிசித்திருக்கிறீர்களா? ஆம் அவர் ஆதி விநாயகர் என்றழைக்கப்படுகிறார். இவர் குடிக்கொண்டுள்ள தலம் திலதர்ப்பணபுரி.

இன்று திலதைப்பதி என்றழைக்கப்படும் இத்தலம் மயிலாடுதுறை-திருவாரூர் மார்க்கத்தில் உள்ள பூந்தோட்டத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது. பெயராலேயே தர்ப்பணம் என்பதைக் கொண்டிருக்கும். இத்தலத்தில் எள் தர்ப்பணம் செய்தால் நமது முன்னோரின் ஆன்மா சாந்தியடையும். திலம் எள்,

தர்ப்பணம் செய்வதற்கு இறையருள் கொண்ட சிறந்த ஸ்தலம் மேலும் காசி, இராமேஸ்வரத்திற்கு இணையான முக்தி கேத்திரமுமாகும்.

 

ஸ்ரீ ஆதி வினாயகர்
இக்கோயிலை மனிதமுகத்தோடு, வலது கை அபயமளிக்க இடது கை தொடையில் இருக்க, வலது கால் கீழே தொங்க, இடது கால் மடித்திருக்க 4 கைகளுடன் காட்சி தருகிறார். இவரது வரலாறு

உலகம்மையான பார்வதி தேவி ஒருமுறை தன் தோழிகளான ஜெயா, விஜயவுடன் நீராடுவதற்காக சென்றார்.

அப்போது ஜெயா, பார்வதியிடன் அம்மையே, நமக்கு காவலாக இருப்பவர்கள் சிவ, பூத கணங்களும் நந்தி தேவரும் தானே. நமக்கென தனியாக ஒருவரைக் காவலாக நீங்கள் ஏன் உண்டாக்ககூடாது? எனக் கேட்க

பார்வதி தேவியும், தன் திருமேனியில் உள்ள அழுக்கை தேய்த்து உருட்டி ஒரு உருவம் உண்டாக்கினார். பின் அதற்கு உயிர் தொடுத்தார். அவர் தான் இன்று நாம் தரிசிக்கும் ஆதிவினாயகர்.

உயிர் கொடுத்த பின் மூவரும் அவரைக் காவலாக வைத்து விட்டு குளிக்கச் சென்றனர்.

அந்த நேரத்தில் பார்வதியைக் காண சிவபெருமான் அவ்விடம் வந்தார். அங்கே புதுக் காவலன்.

சிவபெருமானை மேலும் செல்லாமல் காவலன் தடுத்து நிறுத்த போர் தொடங்கியது. இறுதியில் புதிய காவலனின் தலையைக் கொய்தார் சிவபெருமான்.

குளித்து ஓடோடி வந்த பார்வதி தான் உண்டாக்கிய உயிரை திருப்பி தர வேண்டுமென சிவபெருமானிடம் வேண்ட, அவரும் வேறு தலை இறுக்கிறதா எனப் பார்த்தார். அப்போது ஒரு யானை தலைவேறு, உடல் வேறாகக் கிடக்க, அந்த யானையின் தலையை மனித உடலோடு பொருத்த வினாயகர் உருவானார். அவரைதான் சிவ,பூத கணங்களுக்கும் முதல்வராகியதால் 'கணபதி' என்ற பெயரையும் கொடுத்தார்.

பார்வதி தேவி உண்டாக்கிய முதல் பிள்ளையாரே ஆதி வினாயகர் ஆவார். அவர் திலதைப்பதியில் தான் சன்னிதி கொண்டுள்ளார். ஆதிவினாயகரின் மூலமந்த்ரம்

ஓம் நாரமுகாய வித்மஹே ஹரபுத்ராய தீமஹி
தந்நோ ஆதி ப்ரசோயாத்

இத்தல இறைவன் அருள்மிகு முக்தீஸ்வரரை திருஞான சம்பந்தரும், அருணகிரியாரும் பாடியுள்ளார்கள்.


 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon