குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

தெங்குரங்காடுதுறை

இறைவன் : ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்

இறைவி : பவளக்கொடியம்மை

தீர்த்தம் : ஆபத்சகாய தீர்த்தம்

சுக்ரீவன் வழிபட்ட தலம்
திருஞான சம்பந்தராலும்,அப்பராலும் பாடல் பெற்ற ஸ்தலம் இத்தலக்கோயிலில் சுக்ரீவன் ஆபத்சகாயேஸ்வரனை வழிபடுவது போன்ற கதைச் சிற்பம் உள்ளது.

இராமாயணத்தில் வாலி சுக்ரீவனைப் பற்றி அறியாதவர் இருக்க முடியாது கிஷ்கிந்தையின் அரசரான வாலி தன் தம்பி சுக்ரீவனுடன் ஆட்சி செய்து வந்தான். அப்போது வாலிக்கும் ஒரு மாயாவிக்கும் இடையே நடைப்பெற்ற போரில் மாயாவி வாலியிடம் தோற்று ஒரு குகைக்குள் ஒட வாலி அவனைக் கொல்லாமல் விடுவதில்லை என்று குகைக்குள் சென்று விடுகிறான் பல நாட்கள் ஆகியும் வாலி வெளியே வரவில்லை. இதனால் வாலி இறந்து விட்டான் என்றெண்ணி குகையின் வாயிலை ஒரு பாறையால் முடிவிட்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறான் சுக்ரீவன். பல நாள் கழித்து மாயாவியை கொன்று விட்டு மூடியிருந்த பாறையை தகர்த்து விட்டு வருகிறான் வாலி.
சுக்ரீவன் அரசனாக இருப்பதை அறிந்து தன்னை சதிசெய்து ஏமாற்றிவிட்டான் சுக்ரீவன்
என்று தவறாக எண்ணி சுக்ரீவனை அடித்து விரட்டி விட்டு அவன் மனைவியையும் கவர்ந்து கொள்கிறான் வாலி.

அப்படி அடித்து விரட்டப்பட்ட சுக்ரீவன் வாலிக்கு பயந்து சுற்றியலைந்த போது இத்தல இறைவனான ஆபத்சகாயேஸ்வரரை வணங்கி அருள் பெற்று பின்னரே ஸ்ரீராமபிரானின் அன்பைப் பெற்று அவரது துனையினால் கிட் கிந்தையின் அரசனாகிறான்.

சிற்பச்செய்தி
சோழமண்டலத்துத் திரை மூர்நாட்டுக் தெங்குரங்காடுதுறை எனக் கல்வெட்டுகள் குறிப்பிடும் ஆடுதுறையில் திருகுரங்காடுதுறை மகாதேவர் திருக்கோயில் உள்ளது. பரகேசரி உத்தம சோழனுடைய கல்வெட்டொன்று இத்திருக்கோயிலைக் கற்றளியாகப் புதுக்கியவர் சோழப் பேரரசி செம்பியன் மாதேவியார் என்று குறிப்பிடுகிறது. இக்கோயில் ஆபத்சகாய யேசுவரர் திருக்கோயிலெனத் தற்போது அழைக்கப்படுகிறது.

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 13கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை (தெங்குரங்காடு துறை)

இக்கற்றளியில் கருவறையின் சுவரில் கண்டாதித்த தேவர் சிவலிங்கத்தை வணங்கும் திருக்கோலத்தில் சிற்பமாகக் காணப்படுகிறார். செம்பியன் மாதேவியார் கட்டுவித்த திருக்கோயில்களில் தம் கணவரான கண்டாதித்தரின் உருவச் சிலைகளை எடுத்துள்ளது நோக்குதற்குறியது.


 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon