குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

திருசேய்ஞலூர்-சேங்கனூர்

இறைவன் : அருள்மிகு சத்யகிரிநாதர்

இறைவி : அருள்மிகு சகிதேவியம்மை

தீர்த்தம் : சத்யபுஷ்கரணி

சண்டிகேஸ்வரர் அவதரித்த தலம்
திருநகரம் முன்பொன் ஆலயமெனச் சேய்ஞலூர்
திகழ் சண்டி ஆலயமென
-சோத்திரம் கோவை பிள்ளைத் தமிழ்

முருகன்
சேயடைந்த சேயஞலூரில் செல்வன் சீர்பரவித்
தோயடைந்த வண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்
சாயடைந்து ஞானமல்கு சம்பந்தனி ன்னுரைகள்
வாயடைந்த பாடவல்லார் வானுல காள்பவரே
-திருஞானசம்பந்தர்

சண்டிகேஸ்வரர்:
பீரடைந்த பாலதாட்டப் பேணாத வந்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமைவ குத்ததென்ன
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே
-திருஞானசம்பந்தர்

தலச்சிறப்பு
சஷ்டிகவச நாயகனான எம்பெருமான் முருகன் தவம் செய்த இத்தலம் மாபெரும் சிறப்புடையது. ஒரு காலத்தில் வாயு பகவானும் ஆதிசேஷனும் தம்மில் யார் அதிக பலமுடையவர் என்ற சோதனையில் இறங்கினர். ஆதிசேடன் மேருமலையை தன் உடம்பால் இறுக்கிப்பிடித்துக் கொள்ள வாயுபகவான் பெருங்காற்றை வீசினார். அப்போது மேருலையில் 9 சிகரங்கள் பெயர்ந்து 9 கண்டங்களில் விழுந்தது. அதில் ஒரு சிகரம் கந்தமாதனம் ஆகும். அந்த சிகரத்தில் இருந்த 7 சிறிய கிரகங்கள் பாரதத்தின் 7இடங்களில் விழுந்தன. அதில் ஒன்றான சத்தியம் என்ற சிகரம் இத்தலத்தில் விழுந்து சத்திய கிரி என்ற பெயர் உண்டாயிற்று. மேலும் பல முனிவர்கள் விலங்குகளாகவும்,பறவைகளாகவும்,மரங்களாகவும் உருவமாகி இன்றும் வழிபடுவதாக ஐதீகம். மேலும் எல்லா சிவன் கோயில்களிலும் பிரகாரத்தில் வீற்றிருக்கும் சண்டிகேஸ்வரர் அவதரித்தது சேங்கனூரில்தான். அவர் எப்படி இந்த உயர் நிலையை பெற்றார்? இதோ அவர் வரலாறு

எச்சதத்தன் என்ற அந்தணருக்கு மகனாகப் பிறந்த விசாரசருமர் (சண்டிகேஸ்வரர்) பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டு ஊரிலுள்ளோர் பசுக்களை மண்ணியாற்றாங்கரைக்கு ஓட்டிச்சென்று அன்பொழுக கவனித்துக்கொண்டார். இவவாறு நாட்கள் செல்ல ஒரு நாள் பசுக்கள் தானக்வே பாலைப் பொழுந்தன. இதைக் கண்ட விசாரசருமர் பால் வீணாவதை விரும்பாமல் ஒரு அத்திமர அடியில் மணலால் சிவலிங்கம் செய்து பாலை திருமஞ்சனம் செய்தார். இதைப்பார்த்த வழிப்போக்கன் ஒருவன் ஊராரிடம் சொல்லிவிட எச்சதத்தனைக் கூப்பிட்டு கண்டித்தார். மறுநாளும் விசாரசரும் பசுக்களை ஓட்டிச்சென்ற பொழுது தந்தையாரான எச்சதத்தன் மகனறியாதவாறு பிந்தொடர்ந்தார்.

வழக்கம் போல் அத்திமர நிழலில் மணலில் சிவலிங்கம் செய்து திருமஞ்சனம் செய்தார் விசாரசர்மர் இதுகண்டு பெருஞ்சினம் கொண்ட எச்சதத்தன் அவரருகில் சென்று பாற் குடத்துக்குள் ஒன்றை காலால் எட்டி உதைத்தார். சப்தமிட்டார். மேலும் மேலும் சிவபூஜைக்கு இடையூரு செய்யவே விசாரசருமர் பெருங்கோபம் கொண்டு அருகில் கிடந்த கோலை எடுக்க அது மழுவாயுதமாக மாற தந்தையாரான எச்சதத்தனின் காலகளை வெட்டினார். விசாரசருமர் பூஜையை தொடர்ந்தார். பரமேஸ்வரன் உமாதேவியுடன் தோன்றி எனக்காக ஈன்ற தந்தையை இழந்தாய். இனி யாமே உனக்குத் தந்தை எனக்கூறி உச்சி முகர்ந்து கொன்றை மாலையை அவருக்குச் சூட்டினார்.

மேலும் நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்கேயாம். எம்மை வழிபட்டவர்கள் கடைசியில் உன்னைத் தரிசனம் செய்தால் தாம் எம்மை வழிபட்ட
பலனைப் பெருவார்கள் என்றருளி சண்டிகேஸ்வரர் என்ற பட்டமும் அருளினார். பின்னர் சண்டிகேஸ்வரர் பல காலம் தவம் செய்து திருவாய்பாடியில் (சேங்கனூரிலிருந்தௌ வடக்கு 1 கி.மீ) மோட்சம் அடைந்தார்

சுவாமிமலையில் (பஞ்சகுரோசத் தலத்தில் ஒன்று) சிவனுக்கு பாடம் சொன்ன முருகன் குருவாக இருக்க நேரிட சிவத்துரோக தோஷம் எற்பட்டது. அத் தோஷம் இத்தலத்தில்தான் நீங்கியது.

அரிச்சந்திரன் இத்தலத்தை வந்தடைந்து சத்தியதீர்த்தம் என்ற குளத்தை வெட்டி தை மாத கொடியேற்றி திருவிழாவும் மறுநாள் தேரோட்டி தீர்த்த உற்சவமும் நடத்தினார்.

கோச்செங்கட் சோழன் கட்டிய 70 சிவதலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் பாடியுள்ளார்.

 

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon