அருள்மிகு இராமசுவாமி திருக்கோயில்

 

அவசியம் காணவேண்டிய அற்புதமான கோயில் இது. காரணம் கொயில் மட்டும்மல்ல ஒரு சிறந்த கலைக்கூடமும் ஆகும். இக்கோயில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த ரெகுநாத நாயக்க மன்னரால் கி.பி.1620 ம் ஆண்டு கட்டப்பெற்றது.

முன் மண்டபம் 62 தூண்களுடன் சிற்ப வேலைப்பாட்டுடன் உள்ளது. பெருமாளின் பல்வேறு அவதாரங்களும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மகா மண்டபம் என்று பெயர். கோயிலின் உள் பிரகாரத்தில் இராமயணம் முழுவதும் சித்திரமாக வரையப்பட்டுள்ளன. சுமார் 200க்கு மேற்பட்ட சித்திரங்கள் வரயப்பட்டு சித்திரகூடம் சிறக்கிறது.

 

இக்கோயிலின் உற்சவமூர்த்திகள் மிகப் பழங்காலத்தவை. அவை தாராசுரத்தில் புதையுண்டு இருந்ததாகவும் கி.பி.16ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட அச்சுதப்பெருமாள் தோன்றி அச்சிலைகளை எடுத்து பிரதிஷ்டை செய்து தனக்கு கோயில் அமைக்குமாறு கூரியதாக வரலாறு கூறுகிறது.

சுவாமியின் கருவறை பழைய முறைப்படி அமைந்துள்ளது. ஸ்ரீ இராமபிரானும் அன்னை சீதாதேவியும் ஒரே ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். பரதர் குடைபிடிக்க

 

சத்ருக்குனர் சாமரம் வீச இலக்குமணர் வில்லேந்திய வண்ணம் இராமர் கட்டளையை எதிபார்த்து. நிற்பது போன்ற பட்டாபிஷேக காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

மேலும் கையில் வீணையுடன் ஸ்ரீ ஆஞ்சநேயர் இராமாயண பாராயணம் செய்வது போன்ற திருமேனி ஒரு தனியழகு. இக்கோயிலின் பெருமாள் கோதண்டபாணியாக உள்ளார். கலை வண்ணமும் அருள் வெள்ளமும் சேர்த்து அள்ளித்தரும் இக்கோயிலில் ஸ்ரீ இராமநவமி, கோகுலாஷ்டமி நவராத்திரி காலங்களில் பத்துநாட்கள் பெரிய விழாவாக நடைபெறும்.

 

சிற்பச்செய்தி

தஞ்சை நாயக்கர்களின் வரிசையில் மிகச் சிறப்பித்துக் கூறப்படும் தகுதியைப் பெற்றவன் இரகுனாத நாயக்கனாவான். அச்சுப்ப நாய்க்கன் - மூர்த்திமாம்பிகா தம்பதிகளுக்கு இராமனது அருளால் இரகுநாதன் பிறந்ததாக இரகுனாத நாயக்காப்புதயம் எனும் நூல் கூறுகிறது. சிறுவயதிலிருந்து கோவிந்த தீட்சிதரிடம் கல்வி பயின்று அச்சுதப்ப நாயக்களின் ஆளுகையின் போதே இளவரசனாகப் பணியேற்றவன். கி.பி.1600 முதல் 1634 வரையில் தஞ்சை அரசனாகத் திகழ்ந்தவன். இவனது திறமையை மெச்சி அபிநவ போஜன் என்று விஜயவிலாசம் புக்ழ்சிறது.

 

இசையில் மாமேதையாகத் திகழ்ந்த இம்மன்னனின் தானே இரகுநாதேந்திரவீணை என்ற ஒரு வீணையையும் ஜெயந்தசேனா என்ற ஒர் இரகத்தையும் "இராமானந்தா"
என்ற ஒரு தாளத்தையும் கண்டுபிட்த்தான் என்பதைச் சங்கீத சுதா என்ற நூலின் மூலம் அற்ய முடிகிறது.

யாழ்ப்பாணம் வரை படையெடுத்துச் சென்று போர்த்துக்கீசியர்களின் கடற்படைத் தோற்கடித்தது ம்தலியன இவனது மற்றப் போர்க்களச் சாதனைகளாகும். உஷாபரிணயம் எனும் நூல் இவனது

 

பட்ட்த்தரசியின் பெயர் கலாவதி என்றும் இவனது மற்றொரு தேவியின் பெயர் செஞ்சுலெட்சுமாம்மா என்றும் கூறுகிறது.

சிற்பக்கலைக்கு இராகுநாதன் செய்து தொண்டு மிகப்பலவாகும். கும்பகோணம் இராமசமிக்கோயில் திருக்கண்ணம்ங்கைத் திருக்கோயில், மன்னார்குடி இராசகோபாலசுவாமிக் கோயில் முதலிய இடங்களில் உள்ள படைப்புகள் மிக உயரிய கலைச்செறிவுடையவை. "அநவீரத இராம காதம்ருத சேவகன்" என தன்னைக் கூரிக்கொண்ட இம்மன்னன் இராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு திகழ்ந்ததால் குடந்தை இராமசாமிக் கோயிலில் இராமாயணச் சிற்ப மண்டபத்தைப் படைத்தான். இது சோழநாட்டுக் கலைக் கூடங்களிலேயே தலையாய இடம்பெறத்தக்க ஒன்று.

 

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon