குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்)

இறைவன் : அருள்மிகு பசுபதீசுவரர்

இறைவி : அருள்மிகு காம்பளையதேவி

தலதீர்த்தம் : சூரியதீர்த்தம்

தலவிருட்சம்: சரக்கொன்றை

இக்கோயிலில் அருகிலேயே ஆதிகேசவப்பெருமான் பரிமளவல்லித் தாயாருடன் வீற்றிருக்கிறார்.

இடறினார் கூற்றைப் பொடி செய்தார் மதிலை
யிவை சொல்லி யுலகெழுந் தேத்தக்
கடறினா ராவர் காற்றுளா ராவர்
காதலித் துறைதருகோயில்
கொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போய்க்
கோவணங் கொண்டு கூத்தாடும்
படிறனார் போலும் பந்தணைநல்லூர்
நின்றவெம் பசுபதீ யாரே
-திருஞானசம்பந்தர்

 

நாவுக்கரசராலும், ஞானசம்பந்தராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும், அருணகிரி நாதர் மௌனகுரு சுவாமிகள், இராமலிங்க அடிகள் பாடல் இயற்றி பக்தி செய்த தலமாகவும் விளங்குகிறது பந்தநல்லூர். திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலம் வந்து வழிபட தடை நீங்கும். காரணம் இங்கு திருமணகோலத்திலேயே இறைவனும் இறைவியும் கைகோர்த்த நிலையில் கல்யாண சுந்தரராகக் காட்சியளிக்கின்றனர்.
இதற்கு புராண வரலாறும் ஊரின் பெயர்க்காரணமும்...........

உலகையே காத்து ரட்சிக்கும் பரம்பெருளின் பாதியான அம்பிகை பந்து விளையாட்டில் விருப்பம் கொண்டு 4 வேதங்களையுமே பந்துகளாக்கி விளையாடிக் கொண்டிருக்கிறாள். விளையாடலுக்கு இடையுறு ஏற்படா வண்ணம் சூரியனும் மறையாமல் இருக்க தேவர்கள் இறைவனிடம் முறையிட்டனர். இறைவன் அம்பிகை விளையாடும் இடத்திற்கு வர விளையாட்டில் ஈடுபட்டிருந்த அம்பிகை இறைவன் வரவைக் கவனியாது விளையாடிக்கொண்டிருந்தாள். சினம் கொண்ட ஈசன் பந்தைக் காலால் எட்டி உதைத்தார். பந்து பூமியில் வந்து விழுந்தது.

 

நடந்ததை உணர்ந்த பராசக்தி தவறுணர்ந்து ஈசனிடம் மன்னிப்பு வேண்டினாள். இறைவன் தமது தரவைக் கவனியாமல் விளையாட்டில் ஈடுப்பட்டிருந்தமையால் அம்பிகையை பசுவாகக் கடவது என சாபமிட்டார். தேவி சாபநிவர்த்தி வேண்ட இறைவன் தாம் காலால் எற்றிய பந்து அணைந்த (விழுந்த) தலத்தில் கொன்றை மரத்தின் கீழ் புற்றுருவாக யாம் வீற்றிருப்போம். பசு உருவோடு அங்கு வந்து தம்மை வழிபட்டு சாபநிவர்த்தி அடைவாய் எனக் கூற அம்பிகையும் பசு உருக்கொண்டு பந்து அணைந்த தலத்தில் சரக்கொன்றை மரத்தின் கீழ் சுயம்புலிங்கமாய் இருந்து புற்றின் மீது பாலைச் சொரிந்து வழிபட்டாள்

 

அங்கே பசுவைக் காக்கும் கோபாலனான பெருமால் இருக்க இருவரும் கண்ணாமுனிவர் ஆசிரமத்தில் இருந்து வந்தானர். தினமும் புற்றின் மீது பால் சொரிந்து வந்த பசுவைக் கேசவன் ஒருநாள் கோலால் அடிக்க பசு துள்ளியது. அப்போது பசுவின் ஒரு காலில் குளம்பு புற்றின் மீது பட தேவி தன் உருவம் அடைந்தார்

பெருமாளும் கோவலன் வடிவம் நீங்கி ஆதிகேசவப் பெருமாளாக அருகில் கோயில் கொண்டார்

 

கல்யாணசுந்தரர்:
அம்பிகை வடக்கு நோக்கி அமர்ந்த சிவபெருமானை அடையும் பொருட்டு தவக்கோலம் கொண்டாள். இறைவனும் இறைவியின் தவத்தினை ஏற்று தேவரும் முனிவரும் கண்டுகளிக்க திருமணம் செய்துகொண்டு கல்யாண சுந்தரராக காட்சியளிக்கின்றனர்.

பந்தணைந்தசுவடும் பசு மிதித்ததினால் ஏற்பட்ட குளம்பின் சுவடும் இன்றும் சுயம்பு மூர்த்தியின் மீது காணலாம். இறைவன் இத்தலத்தில் பசுவிற்கு பாதியாக வந்தணைந்தமையால் பசுபதியாகவும் பசுகளுக்கு பதியான இறைவன் பாசங்களினின்று உயிர்கள் விடுதலை பெற உள் நின்று உதவும் சைவ தத்துவத்தை உணர்த்துகின்ற திருகோயிலாகவும் இது விளங்குகிறது.

 

நேர்வரிசையில் நவக்கிரகங்கள்
இத்தலக் கோயிலில் நவக்கிரகங்கள் நேர் வரிசையில் அமைத்துள்ளனர். அதாவது இறைவனின் திருமணக் காட்சியை கண்டுகளிக்கும் பொருட்டு நவகோள்களும் நேர் வரிசையில் நிற்கின்றனர். நேர்வரிசைக் கோள்களை வழிப்பட்டோர்க்கு சகல துயரகும் தீரும். அம்பாள் சாபநிவர்த்தி அடைந்து இறைவனும் இறைவியும் கைகோர்த்து திருமணகோலத்தில் காட்சியளிக்க நேர்வரிசையில் நவகோள்களும் நிற்பதுமான இத்தலம் நாம் நிச்சயம் வழிபட்டுய்ய வேண்டியத் தலம்

கும்பகோணம் சென்னை சாலையில் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

 

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon