குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

பழையாறை

இறைவன் : ஸ்ரீ சோமநாதர்

இறைவி : ஸ்ரீ சோமகலாம்பிகை

தலவிருட்சம் : நெல்லி

தலதீர்த்தம் : சோமதீர்த்தம், சாடயு இந்திர, கமல

தீர்த்தங்கள்

சோழ சாம்ராஜ்ஜியத்தின் மறைந்த மாநகரம். தமிழக பொற்காலத்தின் தலைமைமையம். இன்றும் நாம் அந்தப் பகுதிகளில் செல்லும் பொழுது ஒரு மாபெறும் வரலாற்றுணர்வுக்குள் செல்லாம். சோழர்கள் பல்லவர்கட்கு அடங்கி சிற்றரசாக இருந்த காலத்தால் வாழ்ந்த இடம் தான் பழையாறை. பிற்காலச் சோழர் வரலாற்றில் இந்நகரம் இரண்டாவது தலை நகரமாயிற்று.

இவ்வூருக்கு தெற்கே முடிகொண்ட சோழன் ஆறும் வடக்கில் திருமலைராயன் ஆறும் ஒடுகின்றன. முடிகொண்ட சோழன் ஆறு அந்தக்காலத்தில் பழையாறை (பழைய ஆறு) வழங்கப்பட்டிருக்கிறது.

 

பழையாறை என்பது இன்றிருப்பது போல் ஒரு சாதாரண சிற்றூர் அல்ல. சோழர் ஆட்சியில் ஒரு மாபெரும் நகரம். இன்றிருக்கும் பல தனி ஊர்கள் சோழர் காலத்தில் பழையாறையின் பகுதிகளே. சோழர்களின் அரண்மனை இருந்த இடம் இன்று சோழர்மாளிகை என்ற பெயரில் ஒரு தனி ஊராக உள்ளது. சோழப்படைவீரர்கள் பழையாறையின் நாற்புரத்திலும் காவற்படி போல் குடியிருந்தனர். அவை ஒவ்வொன்றும் தனிச்சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டன.

1. ஆரியப்படைவீடு - வடக்கே சென்று ஆரியரை வெற்றி கொண்ட வீரர்கள்
2. பம்பபைப்படைவீடு - போருக்குச் செல்லும் முன் பம்பை என்ற வாத்தியம் இசைத்து வீரவுணர்வை ஏற்படுத்துவோர்
3. புதுப்படைவீடு - புதிதாக சேர்க்கப்பட்ட படைப்பிரிவு
4. மணப்படைவீடு - இந்நான்கும் இன்று தனித்தனி ஊர்களாக விளங்குகின்றன.

 

மேலும் இன்றைய கும்பகோணம் சோழர்காலத்தில் சந்தையாக இருந்த சிற்றூரே. வாணிபம் நடைபெறும் ஒரு பகுதியே நெல்லுக்கடைத்தெரு, நாணயம் அச்சடித்த இடம்தான் இன்றை கம்பட்ட விசுவநாதர் ஆலயம் உள்ள இடம். (கம்பட்டம் -நாணயசாலை)

திருப்பழையாறை வடதனி
தளி-கோயில். பழையாற்றின் வடகரையில் அமைந்த திருபழையாறை வடதளி எனவும் பெயர் கொண்டது. முழையூர் கோயில் வட தளி என்றும் பழையாறையைத் தனித்தலமென்றும் இவ்விரண்டையும் இணைத்து திருப்பதிகம் அருளிச் செய்யப்பெற்றுள்ளது என்றும் சிலர் கூறுவர்.

கோயில் அமைப்பு
கிழக்கு நோக்கியமைந்த இக்கோயில் இராஜைராஜ சோழனால் திருப்பணிச் செய்யப்பட்டு அவரது இயற்பெயரான அருண்மொழித் தேவேச்சுரம் என்று அழைக்கப்பட்டது.

 

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon