குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

பாபநாசம்

மூலவர் : ஸ்ரீ இராமலிங்க சுவாமி

அம்பாள் : பர்வதவர்த்தினியாகவும்

தலவிருட்சம் : வில்வமரம்

நாம் செய்யும் பாவங்கள் நாசமாகும் இடம் பாசநாசம் ஸ்தலமாகும். பாபவிநாசம் எனும் இத்தலம் கீழே இராமேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. காரணம் ஸ்ரீஇராமபிரானால் தோஷம் நீங்க செய்யப்பட்ட லிங்கம் இத்தலத்தில் உள்ளது. மேலும் ஸ்ரீஇராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட106 இலிங்கங்களும் ஸ்ரீஇராமபகத ஹனுமான் காசியிலிருந்து கொண்டுவந்த அனுமந்தலிங்கமும் கோயிலின் வெளிப்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு தலப் பெருமைகளைக் கொண்ட இத்தலம் 108 சிவாலயம் எனவும் அருள்மிகு இராமலிங்க சுவாமி திருக்கோயில் எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

புராண வரலாறு
ஸ்ரீ இராமசந்திர மூர்த்தி இலங்கையில் இராவணனை சம்ஹாரம் செய்து அதன் தோஷம் நீங்க இராமேஸ்வரத்தில் மூழ்கி விட்டு சீதாப்பிராட்டி, இலட்சுமணன்,ஸ்ரீஹனுமான் ஆக்கியோரோடு அயோத்தி நோக்கி திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது குடமுருட்டி ஆற்றின் அருகே மணற்பங்கான இடத்தினருகில் சுற்றிலும் தென்னை மரங்கள் அடந்த சோலையினருகே வந்தபொழுது தங்களை யாரோ பின் தொடர்வது போல உணர்ந்தாள் சீதாப்பிராட்டி. இதை ஸ்ரீ இராமபிரானிடம் சொல்ல அவரும் தியானத்தில் பார்த்தார். இராவணனின் தங்கையான சூர்ப்பனகையுடன் அவளது பாதுகாவலர்களான ஹரன், தூஷன் என்ற அரக்கர்களை சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட தோஷமே பின் தொடர்ந்து வருவது என்பதை உணர்ந்த ஸ்ரீ இராமர் மேலே செல்லாமல் நின்றார். அவர் நின்ற இடம் படர்ந்து விரிந்த வில்வமரத்தின் கீழே அருகில் குடகுருட்டி ஆறு ஓடியது.

உடனே இராமர் தோஷம் நீங்க சிவலிங்க பூஜை செய்வதே சரி என தீர்மானித்தார். இதையுணர்ந்த சீதாப்பிராட்டி அனுமனிடம் காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்று கொண்டு வறுமாறு பணித்தார்.

அனுமான் காசிக்கு சென்ற பின் சிவலிங்கம் வரும் வரை சீதாப்பிராட்டியார் குடமுருட்டி ஆற்றில் மூழ்கி ஈரமணலால் வரிசையாக சிவலிங்கங்களைச் செய்தார். இவ்வாறே சிதாபிராட்டி 100 க்கும் மேற்பட்ட இலிங்கங்களை வரிசையாக செய்து விட்டார்.

இதைக்கண்ட ஸ்ரீ இராமபிரான் பக்திப் பரவசமாகி சிவலிங்க பூஜையை துவங்கிவிட்டார். பூஜை முடியும் நேரம். அனுமன் சிவலிங்கத்தோடு காசியிலிருந்து வந்திறங்கினார். நடப்பதைக் கண்டார். தான் லிங்கம் கொணரும் முன்னே பூஜை நடந்து முடியும் தருவாயில் இருப்பதைப் பார்த்து விட்டு தான் எனும் ஆணவத்தால் இலங்கையை எரித்த தன் வாலால் இராமர் பிரதிஷ்டை செய்திருந்த லிங்கத்தை (மூலவர் இராமலிங்கம்) கட்டி இழுத்தார். அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. வாலால் சிம்மாசனமே உண்டாக்கிய அனுமனின் வால் அறுந்து 6கி.மீ தொலைவில் சென்று விழுந்தது. (இவ்வூர் இப்போது அனுமான் நல்லூர் எனப்படுகிறது.) ஓரு நொடிதன் நிலை மறந்த ஸ்ரீ ஹனுமான் உண்மை நிலையுணர்ந்து ஸ்ரீ இராமபிரான் தலை சிறந்த பக்தனே உம்மை யாம் கைவிடவில்லை இங்கே 107 இலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இதேனாடு 108 வது சிவலிங்கமாக ஹனுமந்த லிங்கத்தையும் வழிபட்டு பின் அம்பாளை வழிபட்டாலே தோஷம் நிங்கி முழுபலனும் கிடைக்கும் என்று கூநி அருளினார். ஸ்ரீஇராமபிரானின் தோஷமும் நீங்கியது. அதுமுதல் மனித அவதாரமான ஸ்ரீஇராமபிரானின் பாவம் நாசமான இத்தலம் பாபவிநாசம் என்று அழைக்கப்படுகிறது.
சூரியபகவான், சனிபகவான் சாபம் நீங்கியது.
காசியில் இலிங்கம் இன்றைக் காணவில்லை. வசிஷ்டர் சூரியபகவானைக் கேட்க சூரியன் தனக்குத் தெரியாது என்றார். இதை நம்பவில்லை வசிஷ்டர். இது தெரியாமல் ஏன் இருந்தாய் உன் கடமையில் தவறி விட்டாய் எனக் கோபம் கொண்டு சாபமிட்டார். அச்சாபம் நீங்க கண்டியூரில் சாபவிமோசனப்பெருமானை வணங்கிய சூரியபகவான் பாதிசாபம் நீங்கப் பெற்றார். மீதி சாபம் நீங்க பாபநாசம் வந்து வணங்க முழுச்ப சாபமும் நீங்கியது. இவ்வாறு சூரிய பகவானின் சாபம் பாபநாசத்தில் நீங்கியது. வசிஷ்டர் சூரிய பகவானுக்கு சாபமிட்டு விட்டு கோபத்தோடு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்து ஒரு அரசமரத்தில் சனி பகவான் (காக உருவத்தில்) அமர்ந்திருந்தார். வசிஷ்டரைப் பார்த்து சிரித்தார். ஏன் சிரிக்கிறாய் சனியே முனிவர் கேட்க ஒரு குரங்கு வந்து லிங்கத்தை தூக்கிச் சென்றது என்றார் சனீஸ்வர பகவான். அப்படியா இதுவரை ஏன் இதை மறைத்தாய் பிடி சாபத்தை இனிமேல் நீ இந்த காசித்தலத்தில் இருக்காதே என்று சாபமிட்டுவிட்டார். (அதுபோலவே இன்றும் காசியில் காகங்கள் காணப்படுவதில்லை என்பது உண்மை)

சூரியபகவானைப் போலவே சனிபகவானும் கண்டியூரில் வழிபட்டு பின் பாபநாசம் வந்து முழுசாபம் நீங்கப்பெற்றார். சூரிய,சனி கிரஹங்களில் சாபமே இத்தலத்தில் நீங்கியதால் சனிப்பெயர்ச்சி நாளில் இக்கோயிலில் சனிபகவானை வழிபட்டால் சகலதோஷமும் நீங்கி வாழ்வில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தலத்திற்கு வந்து அதிகாலையில் 108 முறை வெளிப்பிரகாரத்தை சிற்றிவரும் பக்தர்களுக்கு அகலாத தோஷமோ,நோயோ எதுவும் கிடையாது. இப்படி உரைத்தவர் ஸ்ரீ கிருபானந்தவாரியார் சுவாமிகள்.

இவ்வூர் கும்பகோணத்திலிருந்து மேற்கே 15கி.மீ தூரத்தில் தஞ்சாவூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon