குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

திருக்குடவாயில் (குடவாசல்)

இறைவன் : ஸ்ரீகோணேஸ்வரர்

இறைவி : பெரிய நாயகி

தீர்த்தம் : அமிடர்ததீர்த்தம்

தலவிருட்சம்ள்: வாழை

அமிர்ததல்மாகிய இக்குடவாசலை அடைய ஒரு அடி எடுத்து வைத்தாலே பேரின்ப வீடு கைகூடும் என்பது ஐதீகம் 24 படிகளைக் கடந்து கட்டுமலைக்கோயிலில் வீற்றிருக்கும் எல்லாம் வல்ல ஈசனை கோணேஸ்வரரை தரிசித்தாலே கைலாயமைலையில் ஏறும் பலனை அடைவர்.

 

குடவாயில்
கும்பகோணத்திற்க்கும் குடவாசலுக்கும் மிகநெருங்கிய தொடர்பு உண்டு எப்படி? அழியும் காலத்தில் பெருவெள்ளத்தில் மித்ந்து வந்து தங்கிய அகிர்த குடத்தை கிராதமூர்த்தியாக வந்து அம்பெய்து உடைத்தார் சிவபெருமான். அப்போது குடம் மூன்றாக உடைந்தது. முதற்பாகமாகிய அடிப்பாகம் காவேரியின் தெங்கரையில் விழுந்தது ஆதிகும்பேசராக எழுந்தார் சிவன். நடுபாகம் வீழுந்த இடம்தான் கலைநல்லூர் (சாக்கோட்டை) இங்கு கலசநாதராகத் தோன்றினார். குடத்தின் வாயில் விழுந்த இடம்தான் குடவாயில் (குடவாசல்)
இங்கு கோணேஸ்வரராக வீற்றிருக்கிறார் எம்பெருமான்.

 

கருடன் வந்தார்
கோணேஸ்வரர் இலிங்கமாக வீற்றிருத்த போது புற்றால் மூடப்பட்டிருந்தார். அப்போது ஸ்ரீ கருடாழ்வார் தன் தாய் விநதையின் அடிமைதனத்தை களையும் பொருட்டு தேவருலகில் இருந்த அமிர்தகடத்தை எடுத்து வந்தார். இத்தலமருகே வரும் பொருட்டு ஒரு அசுரன் வழிமறித்தான். உடனே தன் கையிலிருந்த அமிர்த கடத்தை புற்றின் மிது வைத்துவிட்டு. புற்றினை தன் மூக்கினார் பிளந்தார் கருடன். புற்று சரிய அங்கே ஒரு இலிங்கம் இருந்தது (கோணேஸ்வரர்) தன் தவறை உணர்ந்து கருடர் தன் இறைவனை வேண்ட கருணையே வடிவான இறைவனும் அமிர்த குடத்தை தர வழணங்கிச்சென்று தன் தயின் அடிமை தனத்தை நீக்கினார். கருடனால் வெளிப்பட்டமையால் கருடமாத்ரி எனவும் பெயர் பெற்றார் கோணேஸ்வர்

 

காடடுமலைக் கோயில்
கி.பி.-2 .ம் நூற்றாண்டில் கோச்செஞ்கட் சோழனால் மேற்கு நோக்கிய வாசலைக் கொண்டதாக இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. முனிவர்கள் பலர் தவம் புரிவது போன்ற படிமங்கள் மதில் மீது காணப்படுகிறது. கி.பி.-11 நூற்றாண்டிலேயே ஆடல்வல்லான் சிற்ப்பம் ஒன்று இக்கோயிலில் உள்ளது. இதில் களக்காடிடையார் மலைதாழ் மார்பன் என்ற படைப்பெழுத்துக்கள் காணப்படுகிறது. அமிர்ததீர்த்தத்தின் கரையில் ஆதிகஜானன விநாயகர் வீற்றிருக்கிறார்.சிறப்புச்செய்தி

தஞ்சைமாவட்டம் குடவாசல் என்னும் பேரூர் சங்க காலத்துக் கோநகரங்களுள் ஒன்று இங்கு சங்க காலத்து நிதி சேமிப்பு கிடங்கு, சிறைகோட்டம் முதலியன இருந்தன என்று புறநானூறு,நற்றிணை முதலான இலக்கியங்கள் கூறுகின்றன. கி.பி.-7.ஆம்
நூற்றாண்டிலேயே இங்கு சிற்ந்தொரு மாடக் கோயில் இருந்ததை ஞான சம்பந்தப் பெருமான் பாடுகிறார்.


 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon