குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

கூத்தனூர்

சரஸ்வதி காயத்ரி

ஓம் வாக் தேவ்யை சவித்மஹே

விரிஞ்சி பத்ந்யை சதீ மஹி

தந்நோ வாணி ப்ரசோதயாத்

ஸ்ரீ மஹாசரஸ்வதி ஆலயம்
கல்விக்கு அதிபதியாம், கலை ஞானம் தரும் கலைமள். வெள்ளைத்தாமரைப் பூவிலிருப்பாள். வீனைசெய்யுமொலிருப்பாள் என்ற முண்டாசுக் கவிஞனின் வைரவரிகளில் வர்ணிக்கப்பட்ட மஹா சரஸ்வதி தனிக்கோயில் கொண்டுள்ள ஸ்தலம் கூத்தனூர் ஆகும்.
கும்பகோணம்-காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் (பூந்தோட்டம் வழியில்) கூத்தனூர் தலபுராணத்தை பிரம்மாண்ட புராணம் விளங்குகிறது. ஞானபீடமாக கல்விக்கிறை அரிசொல் நதியில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சங்கமிக்கும் இப்பகுதி தஷிண திரிவேணியாக சிறப்புடன் விளங்குகிறது இத்தலம்.

 

இரண்டாம் இராஜராஜ சோழனால் தன் அவைக்கால புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டு கூத்தனூர் ஆயிற்று. இது வரலாற்று செய்தி. இக்கோயிலின் தேவியான சரஸ்வதியின் திருக்கோலத்தை காண ஆயிரம் கண்கள் வேண்டும். நவராத்திரி சரஸ்வதி பூஜையும், விஜயதசமியும் இத்தலத்தில் முக்கிய திருவிளாக்களாகும்.

புராணம்
பார்வதி திருமணம் செய்துகொள்ளும் முன் தன் சிரசில் உள்ள கங்கை தேவியை பார்வதியின் தந்தை பர்வதராஜன் கண்டு தவறான எண்ணம் கொள்ளக்கூடாது என, ருத்ரகங்கையில் தவம் புரிந்து பாஸ்கரனிடம் அந்தணர் வடிவத்தில் சென்று தாம் திரும்பிவரும் வரை தன் மனைவியை ஆறு, குளங்களுக்கு செல்லாமலும் தர்ம நியாயப்படியும் காத்துவருமாறும் பின் தாம் திரும்பி வந்தபின் ஒப்படைக்குமாறும் கூறிஸ் சென்றார். அவ்வாறு அப்பெண்னை கங்கை என அறியாது பாஸ்கரரும் தன் மகள் போல் காத்து வந்தார். ஒருநாள் ஆசிரமத்தின் அருகில் ஒடும் அரசலாற்றில் (அரிசொல் ஆறு) நீராடிய பாஸ்கரர் மறந்து போய் அசிரமத்தில் வைத்துவிட்டு வந்த பாத்திரம் ஓன்றினை எடுத்துவருமாறு கங்கையிடம் உரத்த குரலில் கூற கங்கையும், பாத்திரத்துடன் ஆற்றங்கரைக்கு வர தன் பூர்வ குணம் காரணமாக திடீரென ஆற்றில் கலந்து மறைந்தாள். திடுக்கிட்டார் பாஸ்கரன். செய்வதறியாது திகைத்தார். இதோ பாஸ்கரரிடம் வந்துவிட்டார் அந்தணர். பாஸ்கரர் என்ன சொல்வதென்று அறியாது கண்ணீர் விட்டார், கதறினார். சொன்னபடி பெண்ணை ஒப்படைக்க முடியவில்லையே என மனம் குமைந்தார்.

 

இறைவனோ இது பற்றி மன்னனிடம் புகார் செய்யப் போவதாகவும் தற்கோலை செய்து கொள்ளப் போவதாகவு அச்சிறுத்த பாஸ்கரர் மனம் கலங்கி உள்ளம் உருகி இறைவனிடம் அழுதார். இறைவன் தன் திருமேனியைக் காட்சியளித்து தானே அந்தணன் என்றும் கங்கா தேவியே அப்பெண் என்றும் கூறி பாஸ்கரரை ஆட்கொண்டு காத்து ஆபத்சகாயேஸ்வரராக அங்கு அமர அரசலாற்றில் கங்கை கலந்து இடம் ருத்ரகங்கை ஆயிற்று. பின் கங்கை கலந்த இடத்தில் சரஸ்வதி நதியும் கலந்தது.
இதை பிரம்மாண்ட புராணம் விளக்குகிறது.
பிரம்மலோகம்.பிரம்மரும், கல்விக்கடவுள் மஹா சரஸ்வதியும் தத்தம் பீடத்தில் அமர்ந்திருக்க பேரழகுடன் விளங்கிற்று இவ்விடம். பிரம்மலோகத்தின் அழகிற்கு தாமே காரணம் என பிரம்ம தேனும்,சரஸ்வதியும் தமக்குள் விவாதம் செய்ய சொற்போர் தொடங்கி அனல் பரந்தது. இருவரும் ஒருவர்க்கொருவர் சாபமிட இறுதில் பூவுலகில் சோழதேசத்தில் புண்ணியகீர்த்தி-சோபனை என்ற அந்தண தம்பதியருக்கு அண்ணன்,தங்கையாகப் பிறந்தனர். தக்காலத்தில் புண்ணியகீர்த்தி திருமண ஏற்பாடுகள் செய்தார்.

அப்போதுதான் தான் இருவருக்கும் தம் முந்தைய நிலை நினைவுக்கு வந்தது. உடனே சிவனை நினைத்து உளம் கசிந்தனர். மன மழிந்து சிவனைப் போற்றினர். காத்தருள வேண்டினர். அப்போது ஓர் அசரீரி கேட்டது அதன்படி சிரத்தை (சரஸ்வதி) கூத்தனூரில் கங்கையுடன் கலந்து அந்நதியில் ஓர் அம்சமாகி ஆபத்ரகாயர்-பரிமளநாயகி அபிஷேக நீராகி பின் கூத்தலூரில் அரசலாற்றில் (அரிசொல் ஆறு) கரையில் மஹா சரஸ்வதியாகக் கோயில் கொண்டாள். அவ்வாறே பிரம்மதேவரும் இறைவன்-இறைவியை வணங்கி தன் பழைய நிலையை அடைந்தார்.

சிவனிடம் முடியைக் கண்டதாக முன்பொரு முறை பிரம்மன் கூறியதல் வழக்கம் போல் பிரம்மனுக்கு கோயில் அமைக்கவில்லை. ஆனால் பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க, தனி ஆலயம், பூஜை இல்லாவிடினும் தர்ப்பணம் முதலான அனைத்து பிதிர் கர்மங்களிலும் பிரம்ம பூஜை விசோஷமானதாக இருக்கும் என்று எம்பெருமான் அருளினார். இவையே பித்ரு காரியங்களில் பிரம்ம பூஜை ஏற்பட்ட வரலாறு.

சிறப்பு வழிபாடு
1) புரட்டசி நவராத்ரி வைகாசி விசாகத்தன்று வழிபடுவோர் சரஸ்வதியின் முழுமையான கடாட்சத்தினை அடைவர்.
2) அரசலாற்றங்கரையில் தர்ப்பணம் முதலிய பித்ரு கர்மங்கள் செய்வது மிக மிக விசேஷமானது (கூத்தனூர் முதல் ருத்ர கங்கை வரை சுமார் இரண்டரை கி.மீ)
3) மகர மாதத்தில் தர்ப்பணங்கள் இயற்றுதல் பெரும் பேருமளைத் தரவல்லது.
4) குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க இத்தலம் வந்து வழிபடுவது மிகவும் சிறந்தது.
5) கிருஷ்ண லீலையில் யமுனை தேவி கிருஷ்ணன் மேல் மோகம் கொள்ள, சாப மேற்றப்பட்டது. பின் சாப விமோசனமாக இத்தலத்தில் கங்கை, சரஸ்வதியுடன் கலந்து இறைவனை வணங்க சாபம் நீங்கியது. அதுமுதல் கங்கை,யமுனை,சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளினின் திரிவோணி சங்கமமாக விளங்குகிறது இத்தலம். அவரவர் பாவங்கள் நீங்க இத்தல திரிவோணி சங்கமத்தில் நீராடி வேண்டினால் பாவங்கள் நீங்கும்.

கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு அந்தக் கல்விக்கே அதிபதி, வாக்கில் இருக்கும் சக்தி, கலைமகளின் கோயிலான கூத்தனூர் வருங்கள் திருவடித் தாமரை வணங்கி திருவருள் பெருங்கள்

கலைமகள் துதி
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என்
மண்கண்ட அளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பலகோடி உண்டேனும் விளம்பிலும் போல்
கண்கண்ட தெய்வம் உள்தோ சகலகலாவல்லியே
-குமார குருபரர் (சகலகலாவல்லிமலை)

சிற்பச்செய்தி
ஒட்டக்கூத்தர் கலைமகளின் திருவருள் வாய்க்கப் பெற்றவராதலின் அரசலாற்றங்கரையில் கலை மகளுக்குக்கோயில் அமைத்து வழிபட்டார். அவ்வூர் தற்போது கூத்தனூர் (குடவாசல் ஒன்றியம்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.இவரால் தோற்றிவைக்கப்பட்ட அந்த ஆலயம் இனறும் சிறப்பாக உள்ளது. ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியில் ஆற்றங்கரை சொற்கிழத்திவாழியே என்று கூத்தனூர்க் கலைகளைப் போற்றுகிறார். இவரது வழிதோன்றலான .ஒவாக்கூத்தன் என்பார் கலைமள் கோயிலுக்கு அளித்த நிவந்தங்கள் பற்றிய கல்வெட்டொன்று இன்றும் உள்ளது

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon