குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

 

திருநல்லம் (கோனேரிராஜபுரம்)

இறைவன் : ஸ்ரீ உமாமகேஸ்வரர்

இறைவி : ஸ்ரீ அங்காள நாய்கி

தீர்த்தம் : பிரம்மதீர்த்தம். பூமிதீர்த்தம். ஞானகூபம்கல்லால நிழல்மேய கரைசேர் கண்டாவென்
றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த
எல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே
-திருஞானசம்பந்தர்

நல்லனவற்றையெல்லாம் அள்ளித்தரும் நல்லவருள் ஸ்தலம் திருநல்லம் (கோனேரி ராஜபுரம்) மூர்த்தி தலம் தீர்த்தம் என மூவகையாளலும் சிறப்புற்று உமைக்கு நல்லவன் தான் உறையும் பதி நமக்கு நல்லது நல்லம் அடைவதே என அப்பர் பெருமானால் ஆராதிக்கப்பட்ட க்ஷேத்திரம் எனும் பெருமைக்கொண்ட இத்தலம் பூமிதேவியால் வழிப்பட்டதால். முன்னொருயுகத்தில் அசுரன் ஒருவன் பூமியை தூக்கி கொண்டுபோய் பாதாளத்தில் வைத்துவிட்டான். ஸ்ரீ மஹாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து பூமியை வெளியில் கொண்டு வந்து பூமியைக் காப்பாற்றினார்.

பின் பூமிதேவியிடம் இதுபோல் மீண்டும் நடக்காதிருக்க சிவபெருமானிடம் வரம் பெற வேண்டும் எனத் திருமால் கூற அதற்காண வழிமூறைகளை அவரிடமே கேட்டறிந்தாள். அதன் படியே பூஜைக்கான இடம் தேடினாள் பூமிதேவி. ஸ்ரீமஹாவிஷ்ணு நேத்ரார்ப்பணம் செய்து பல ரிஷிகள் வழிபட்ட தல்முமான திருவீழிமிலைக்கு வடமேற்கில் ஒரு அற்புதமான இடத்தைக் கண்டாள். அங்கே பத்ராஸ்வத்தம் (அரசமரம்) விருட்சமும் அதில் பலவித பறவைகள் கூடுகட்டி வாழ பிரம்மாவினால் ஏற்ப்படுத்தபட்ட பிரம்மதீர்த்தமும் இருக்கக் கண்டு இவ்விடமே பூமியைக்காக்க வரபெற வேண்டிய ஸ்தலம் என அறிந்தாள்.

தேவசிற்பியான விஸ்வகர்மா கோவில் அமைக்க வைகாசி மாதம் குருவரத்தில் உரோகிணியும் பஞ்சமியும் கூடிய சுபநாளில் விருஷப லக்கணத்தில் தேவகுருவாகிய பிருகஸ்பதி சூட்சுமாகம முறைப்படி உமாமகேஸ்வரரை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்தருள; பூமாதேவி முறைப்படி வளிப்பட்டாள். பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் தரிசனம் தந்து உலக உயிர்கள் பாவங்களிலிருந்து வீடுபட தீர்த்தம் ஒன்றை உண்டாக்க பூமிதேவியைப் பணிந்தார். பூமிதேவியால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் பூமி தீர்த்தமாகும்.

பரிகார சிறப்புகள்
உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும் அங்கவள நாயகி கிழக்கு நோக்கியும் மாலை மாற்றிக்கொள்ளும் நிலையில் வீற்றிருந்து இத்தலம் வந்து வழிப்படுவோர்க்கு திருமணத் தடையை நீக்குகின்றனர். நல்லத்தான் நமையாளுடையான் சுழல் சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே என அப்பர் அருள் வாக்கிற்கிணங்க குழந்தையில்லா துயரம் இத்தலத்தில் தீரும். ஊழ்வினைப் பயனால் பில்லி சூனியம் பகை என எதிரி வழி வரும் எல்லாத் துயரமும் நல்லம் மேவிய நாதனடி தொழவெல்ல வந்த வினைப்பகைத் தீருமே என நவுக்கரசரின் நல்வாக்கிற்கு ஏற்ப இத்தல இறைவனை வழிபட பொல்லாத் துயரமும் பொடிப்பொடியாகும். புரூரவஸ் பிரதிஷ்டை செய்த ஸ்ரீவைத்திய நாதரை வழிப்பட்டு நோய் நீக்கியோர் ஏராளாமானோர்.

வரலாற்றுப் பாதையில் திருநல்லம்
சோழ சாம்ராஜியத்தின் செல்லக் கோயிலாக விளங்கியது திருநல்லம் கண்டாதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவியாரால் கருங்கல் கற்றிளியாக்கப்பட்ட இக்கோயிலில் 42க்கும் மேற்பட்ட சோழ அரசர்கள் பெருபான்மையோரின் கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலின் மிகப்பெரிய அற்புதம் செம்பியன் மாதேவி காலத்து உலகின் மிகப்பெரிய நடராஜர் சிற்பம் சிற்பக்கலையின் சிகரமாக ஆறடி உயரத்தில் சிலிற்க்கவைக்கும் வகையில் உள்ளது.

சிறுபுன்னைகையில் உலக மாயையை அலட்சியமாகப் பார்க்கும் கம்பீரம் கண்கொள்ளாக் காட்சியாகும். விரிசடையில் நட்சத்திரங்களும் கொக்கிறமும் ஊமத்தம் பூவும் செருகிய முடியுடன் ஆடைகள் பறக்க அருகில் சிவகாமி அம்மையும் வீற்றிருக்க அந்த இடமே பூமீயைக் காக்கும் இடம். கன்னத்தில் இயற்கையான மச்சமும் இடக்கை தோள்பட்டையின் கீழ் மருவும் தூக்கிய இடப்பாகத்தில் காயம் பட்டவடுவும் கொண்ட நடராஜரின் திருமேனி எங்கும் காணமுடியாத வார்ப்புக்கலை வடிவம். இலக்கியத்தில் அமரர் கல்கியின் சரித்திரப்படைப்பான பொன்னின் செல்வனின் திருநல்லம் பேரிடம் வகிக்கிறது. செம்பியன் மாதேவியார் இத்தலத்தில் கட்டிய வசந்தமாளிகையில் இராஜராஜ சோழன் (அருள் மொழிவர்மன்) தன் வருங்கால பட்டத்தரசியான வானதியை எதிர்பாராத விதமாக சந்திப்பதாக எழுதியுள்ளார். அப்பரும் ஞானசம்மந்தரும் இத்தலத்தைப் போற்றிப்பாடியுள்ளனர்.

திருநல்லம் (கோனேரிராயபுரம்) திருக்கோயில்
வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
நங்ககோனமையாள் வானல்ல நகரானே
என்று காழிப்பிள்ளை பாடும் திருநல்லம் எனும் ஊர் தற்போது கோனேரிராயபுரம் என்று அழைக்கப்படுகிறது. இது கி.பி. 15ஆம் நூற்றாண்டில் அமைந்த பெயர் மாற்றமாகும். இவ்வூரில் சோழப்பேரரசி செம்பியன் மாதேவியார் கண்டராதித்தம் எனும் கற்றளி எடுப்பித்து அதில் தம் கணவனின் திருவுருவத்தையும் இடம்பெறச் செய்தார். இத்தளி தற்போது உமாமகேசுவரர் திருக்கோயிலென அழைக்கப்படுகிறது.

இதன் தென்புறச் சுவரில் ஒரு சிற்பத் தொகுதியும் கல்வெட்டும் உள்ளது. சிற்பத்தில்
ஒரு சிவலிங்கத்திற்குப் பட்டர் ஒருவர் ஆடை சுற்றிக்கொண்டிருக்க எதிரே கால்களை மடித்து அமர்ந்த நிலையில் வணங்கும் கோலத்தில் கண்டராதித்தரும் அவருக்குப் பின்புறம் ஒரு கையில் வாளும் மறு கையில் சாமரமும் ஏந்தி நிற்பவரும் தாடியுடனும் கொண்டையுடனும் குடை தாங்கிக் கொண்டு பின்னால் அமர்ந்திருப்பவரும் காணப்படுகின்றனர்.


 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon