குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

 

கிருஷ்ணாபுரம்

இறைவன் : ஸ்ரீ காருண்யேஸ்வரர்

இறைவி : ஸ்ரீ காருண்யநாயகிகுடந்தையிலிருந்து நாச்சியார் கோவில் செல்லும் பேருந்து வழித்தடத்தில் 5 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

மாபெரும் சிறப்புடையது இச்சிவாலயம். காரணம் இக்கோயிலில் அமைந்துள்ள தெய்வச் சிற்பங்கள் தனிச்சிறப்பையும், தத்துவத்தையும் உள்ளாக்கியுள்ளது.

ஸ்ரீ காருண்யேஸ்வரர்
இலிங்க வடிவமான ஸ்ரீ காருண்யேஸ்வரர் வேதங்கள் நாங்கின் ஸ்ரீ சக்கரவடிவில் பஞ்ச இரேகைகளுடன் நெற்றிக்கண் ஒளிச்சக்தியாக காட்சி அளிக்கிறார். சிற்ப அமைதியும் இலிங்க வடிவமும் காண்க்கிடைக்காத ஒன்றாகும்.

ஸ்ரீ கருண்யநாயகி
கருணையே வடிவமானவள் நம்மைப் பெற்றதாய். தாய்களின் தாயாக கருணையே வடிவாக இத்தலத்தில் உறையும் ஸ்ரீ கருண்யநாயகி மகாமேரு கருவறையில் காட்சி தருகிறாள். சங்குசக்கரத்துடன் விஷ்ணு ரூபிணியாக வைஷ்ணவ தேவியாக கலை அம்சங்களுடன் காட்சி தந்து அருள்பாலிக்கிறாள்.

சிரசில் சக்கரத்துடன் ஸ்ரீ விநாயகப் பெருமானும் தேவர்கள் ரிஷிகள் கிண்ணரர் கிம்புருடர் சமேதராய் கரங்களில் சர்ப்பம் சக்கரம் தாங்கி தெற்கு நோக்கி காக்கும் வேத குருவாய் ஸ்ரீ தெட்சிணாமூர்த்தியும் காட்சியளிப்பது கண்கொள்ளா காட்சியாகும்.

ஸ்ரீ சனிஸ்வரர்
இக்கோயிலில் தனி ஆலயத்தில் தன் திசையான மேற்கு நோக்கிய நிலையில் சந்தஸ்வரூபியா எங்கும் காணக்கிடைக்காத தர்ம தேவதையாய் தனக்குரிய வாகனத்துடன் காட்சி அளிக்கிறார் ஸ்ரீ சனிஸ்வர பகவான்.

இராகு-கேது
கால சர்ப்பமாகிய இராகு, கேது என்ற இரு கிரகங்களும் இக்கோயிலில் ஒன்றாக பின்னிப் பிணைத்து காட்சித் தருகிறார். இவ்வாறக இத்திருகோயில் முன்னோர்களால் வேத சாஸ்திர நியதிப்டியும் மிக நுணுக்கமாக மூர்த்தி சிறியதாயினும் அதன் கீர்த்தி அளவிட இயலாத வகையிலும் ஸ்தபிக்கப்பட்டுள்ளது.

கழுக்காணி மடம்
தற்போது பேச்சு வழக்கில் கல்காணிமண்டபம் என அழைக்கப்படும் கிருஷ்ணாபுரம் சிவாலயம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இக்கிராமமே சிவ பக்தர்கள் நிறைந்தற்கு சாட்சியாக கழுக்காணி அம்மாள் என்ற சிவனடியாரின் வறலாறு கூறப்படுகிறது.

சிவனடியார்க்கு அன்னமிடுவதையே தன் வாழ்வின் கடமையாகக் கொண்ட கழுக்காணி அம்மாள் ஒரு நாள் ஒரு சிவனடியாருக்கென அன்னம் படைத்திருந்தார் அதை அவரது 16 வயது பாலகன் எச்சர் (எச்சில்) படுத்திவிட பதறிய கழுக்காணி அம்மாள் ஒரு உலக்கையால் பாலகனின் தலையில் அடிக்க அக்கணமே சுருண்டு விழுந்து இறந்துவிடுகிறான் மகன். பிணத்தை ஒரு பாயில் சுருட்டி பரணையில் வைத்துவிட்டு பதட்டமேதுமின்றி சிவனடியார்க்கு அன்னம் பரிமாறினார்.

கழுக்காணி அம்மாளின் பக்தி நெறியை மெச்சி வியந்து பாலகனை உயிர்ப்பித்தருளி அருளினார் சிவனடியாராக வந்த சிவபெருமான். இந்த அம்மாளின் பெயரிலேயே இவ்வூர் கழுக்காணிமடம் என்ற பெயரில் விளங்கி வந்தது. கழுக்காணி அம்மாள் முக்தியடைந்தபின் இவ்வூர் சிவபக்தர்கள் அம்மன் சந்நிதிக்கு அருகில் கழுக்காணி அம்மாள் சிலையை பிரதிஷ்டை செய்து சிவதொண்டு செய்து வந்துள்ளனர்.

கிருஷ்ணாபுரம்
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இவ்வூரில் கிருஷ்ணா மடம் ஒன்றை நிறுவி பெருமாளை பூஜித்து வந்தனர் பெரியோர்கள். அவர்கள் காலத்திலேயே இவ்வூர் கிருஷ்ணாபுரம் என தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்தல வெண்பா
அப்பருக்கு தப்பதத்தை
ஈந்தாறுநாளில்
கப்பரை ஏந்தி சிறுதொண்டர் தன்னை
ஒப்பிடவே கயிலை சேர்ந்தருளினாள்
உயரிய திருக்குடந்தை தெங்கிழக்கே
கற்புடைய மங்கை ஒரு சைவ ஜாதி
கழுக்காணி மடமென்ற ஊரிலுள்ளார்
இப்புவியில் இவளைப் போல் ஈசன்பக்தி
எங்ஙனமே செய்யாதின்றியம்பினாளே

இப்படி பல்வேறு சிறப்புகளுடைய இத்திருக்கோயில் சிவ அன்பர்களாலும், கிராம வாசிகளாலும் இயன்றளவு புணரமைக்கப்பட்டு வருகிற்து. ஆனாலும் புதுப்பொலிவுடன் புரருத்தாரணம் செய்ய சிவனேசன் தொண்டு என சிவ அன்பர்கள் நினைத்து தங்களால் இயன்ற அளவு பொருளுதவி அளித்து புண்ணியமடைய வேண்டுகிறார்கள் இக்கிராம மக்கள்.


 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon