அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில்

இறைவன் : அருள்மிகு காசி விஸ்வநாதர்

இறைவி : அருள்மிகு விசாலாட்சி

தல விருட்சம் : வில்வம்

தலதீர்த்தம் : மகாமககுளம்


வாரார் கொங்கை மாதோர் பாக மாக வார்சடை
நீரார் கங்கை திங்கள் சூடி நெற்றி யொற்றைக்கண்
கூரார் மழுவொன் றேந்தி யற்தண் குழகன் குடமூக்கில்
காரார் கண்டத் தெண்டோள் எந்தை
காரா ணத்தாரே – திருஞானசம்பந்தர்

 

இராவணனை வெல்ல வேண்டுமெனில் உருத்திராட்சம் பெற வேண்டுமென்று ஸ்ரீஇராமபிரான் அதர்கான வழியை அகத்திய முனிவரிடம் வேண்ட, அதற்கு அகத்தியர் கும்பகோணத்தில் உள்ள காசி விஸ்வேஸ்வரரை வழிப்பட்டால் உருத்திராட்சம் பெறலாம் எனக் கூறினார். அதன்படி ஸ்ரீஇராமபிரான் கும்பகோணம் வந்து தங்கி காசி விஸ்வேஸ்வரரை வழிப்பட்டு உருத்திர அம்சம் பெற்றார் எனக் கூறுவர்

 

இக்கோவில் மகாமகக் குளத்தின் வடக்கரையில் அமைந்துள்ளது. மக்கள் பாவங்களை ஏற்றுக்கொண்ட கங்கை, யமுனை முதலிய நவக்கன்னியர்கள் தங்கள் பாவங்களை போக்க இறைவனை வேண்ட இறைவன் மகாமக நாளன்று மகாமகக் குளத்தில் ஸ்நானம் செய்யச் செய்து பாவங்களைப் போக்கியருளினார். எனவே நவகன்னியர்; சந்நிதியும் இக்கோவிலில் தென்முகமாக உள்ளது. நவக்கன்னியரை பெண்கள் வழிப்பட்டால் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்.

 

சிறப்புச்செய்தி
கும்பகோணத்தில் வீரபத்திர சுவாமி திருக்கோவிலும் மடமும் மகாமகக் குளத்திற்கண்மையில் உள்ளன. சுமார் 4 அடி உயரத்தில் இறைவனை வணங்கும் கோலத்தில் ஒட்டக்கூத்தரின் சிலை வழிப்பாட்டிலுள்ளது.

 

இது மிக எழில் வாய்ந்த கி.பி.12ம் நுற்றாண்டுக் கற்படிமமாகும். வீர சைவம் மற்றும் சாத்த அடிப்படையில் தோன்றிய இம்மடம் சோழர்கள் காலத்திலிருந்து தொடர்ந்து இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. சிற்ப அமைதி வழிபாட்டு நெறி மற்றும் தொன்மையின் எச்சங்களாளும் இச்சிலையை ஒட்டக்கூத்தருடைய படிமம் எற்றுக் கொள்ள முடியும்.
- குடவாயில் பாலசுப்பிரமணியன்

 

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon