குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

 

திருக்கருவிலிக் கொட்டிட்டை
(கருவிலி)

இறைவன் : ஸ்ரீ சற்குணேஸ்வரர்

இறைவி : ஸ்ரீ சர்வாங்க சுந்தரி

தீர்த்தம் : இமைய தீர்த்தம்

கருவேலி கோயில் நகரமாம் கும்பகோணத்தில் உள்ள அனைத்துக் கோயில்களையும் தரிசிப்பதால் கிடைக்கும் பலன் கருவேலியாகிய இந்த ஒரு தலத்தை வழிப்படுவதாலேயே கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

 

3500 வருடங்களாக மண்முடிக்கிடந்த ஒரு கோயில் இன்று புதுப்பிக்கப்பட்டு புத்தொளியுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இத்தலம் தான் திருகருவிலிக் கொட்டிடை என்ற கருவேலிக் கோயில். கருவிலி எனபது ஊர்ப்பெர். கொட்டிடை எனபது கோயிற் பெயர். கருவிலி என்னும் பெயர் மருவி கருவேலி என்றழைக்கப்படுகிறது.

இத்தல இறைவன் அதோமுக மந்ரவின்யாசத்தில் பிரதிஷ்டையாகியுள்ளார். இந்த வின்யாசத்தில் பிரதிஷ்டையான பரமேஸ்வரனை தரிசிப்பதால் மனமாசுகள் அழியும் துன்பங்கள் ஒளியும் செல்வம் வளரும், மோட்சம் கிட்டும், மோட்சம் அடையும் வரை கவலைகளற்ற வாழ்வு கிட்டும்.

 

சந்தி நிலவும் கருவரையில் இலிங்கமூர்த்தமாக இருக்கும் சற்குணேஸ்வரர் நமது பிறவிப்பணி தீர்க்கும் அருளாளர்.கரு+இலி=கருவிலி அதாவது இத்தல இறைவனை வழிப்படுவோர் மறுபடியும் கருவாகிப் பிறக்கும் கதி அடையார். சற்குணன் என்னும் ஒரு சிற்றேரசன் இவ்விறைவனை அனுதினமும் வழிப்பட்டு தன் உடல் நோயும் நீங்கி இறுதியில் கோட்சமடைந்தான். ஆகவே இத்தல இறைவனுக்கு சற்குணஸ்வரன் என்றே பெயராயிற்று. முப்புரங்களையும் எரித்து சிவபெருமான் தனக்கு ஏற்பட்ட பெருமகிழ்ச்சியால் கொடுகொட்டி என்ற ஆட்டத்தை இத்தலத்தில் நிகழ்த்தினார். எனவே இக்கோயிலுக்கு கொட்டிடை என்று பெயருண்டாயிற்று.

சர்வாங்கசுந்தரி
ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியில் அம்பாளின் திரு உருவத்தை மிக அழகாக வர்ணித்துள்ளார். அந்த அழகை நீங்கள் நேரில் தரிசிக்க வேண்டுமா? உடனே வாருங்கள் கருவிலிக்கு. கிழக்கு நோக்கிய நிலையில் சர்வாங்க சுந்தரி என்ற பெயருடன் அதி அற்புத அழகுத்திருமேனியாய் வீற்றிருக்கிறாள். சர்வ அங்க சுந்தரியின் அழகை வர்ணிக்காதவர்கள் இல்லை என்பதே உண்மை

இக்கோயிலில் உள்ள அனைத்து மூர்த்திகளும் சிற்பகலைக்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. நேரில் கண்டு ஆனந்தம் அடைய வேண்டிய தலம். இத்தலத்திற்கு வேறொரு பெயர் சற்குணஸ்வரபுரம். சற்குணன் என்ற அரசன் தன் பெயராலேயே இவ்வூரை அமைத்ததாக கூறப்படுகிறது.

 

கொடுகொட்டி நடனம்
கொடுகொட்டி பூமி அதிராமல் பாதங்களைத் துக்கி மெதுவாக ஆடும் நளின ஆட்டம் மார்பை அகலவிரித்து கரங்களை பயங்கரமாகத் துக்காமல் மெதுவாகமென் முத்துரைகளைக் காண்பித்து அசைந்தாடி நயனங்களால் கூர்மையாக உற்று நோக்கி குனிந்து கனிந்து காருண்யப் பார்வையுடன் ஆடிய ஆட்டம்.

கும்பகோணத்திலிருந்து 22 கி.மீ.தொலைவில் உள்ள வடமட்டத்திலிருந்து தெற்கு 3கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.


 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon