அருள்மிக கம்பட்ட விஸ்வநாதர் கோவில்

இறைவன் : கம்பட்ட விஸ்வநாதர்

இறைவி : அம்மை ஆனந்தவல்லி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : வருண தீர்த்தம்


 

முன்பொரு காலத்தில் இத்தலம் இருந்த இடம் வனமாக (காடு) இருந்தது. இதற்கு மாலதிவனம் என்று பெயர். அப்போது உதயகிரி என்ற ஊரி;ல் தூமகேது என்பவர் சிவனிடம் பக்தி கொண்டு முனிவராகி வாழ்ந்து வந்தார். ஒருநாள் முக்திக்குறிய தலம் எது என பெரியோரிடம் விசாரிக்க கும்பகோணம் எனக் கூறினார். உடனே சீடருடன் கும்பகோணம் வந்தடைந்தார் தூமகேது.

மகாமக குளத்தில் நீராடி,ஆதி கும்பேஸ்வரரை வழிப்பட்டு பின் தென்மேற்கில் சிறிது துரம் செல்ல அங்கு மாலதிவனம் இருக்கக் கண்டார். இவ்வனத்தின் உள்ளே தூமகேது செல்ல, அங்கே ஒரு சிவலிங்கத்தைக் கண்டார். ஊள்ளம் உருக கண்ணீர் மல்கி பூசை செய்ய எண்ணினார். நீராட இடம் தேட வருண தீர்த்தம் இருந்தது. இவ்வாறு பல நாள் செல்ல, ஒருநாள் ரிஷப வாகனத்தில் அம்மையப்பனான காட்சி தந்த என்ன வரம் வேண்டும் கேள் என்றார் சிவபெருமான்.

 

சுpறந்த முனிவரான தூமகேது 'ஐயனே, உலகை காக்கும் ஈசனே' எனக்கெது வேண்டும். நீங்கள் சிவலிங்கமாக இவ்விடத்தில் அமர்ந்திருந்த காரணத்தால் விசுவநாதர் எனப் பெயர் கொண்டும் வணங்குவோர்கெல்லாம் ஆனந்தம் தரும் அம்மை ஆனந்தவல்லி என்றும் பெயர் கொள்ள வேண்டும். நூன் புதுப்பித்த வருண தீர்த்தம் என் பெயரால் வழங்கப்பட வேண்டும் என வேண்ட அவ்வாறே ஆகும் என்ற அருளினார் இறைவன்.

கம்பட்டம் என்ற சொல்லுக்கு சோழர்கள் காலத்தில் கங்க சாலை என்று அர்த்தம். சோழர்கள் தஞ்சையை தலைநகராக கொண்டு ஆண்டபோது இங்கு தங்க நாணயம் அச்சடித்தனர். எனவே தங்க சாலையில் அதாவது கம்பட்டத்தில் எழுந்தருளியுள்ள விசுவநாதர் கம்பட்ட விசுவநாதர் எனப் பெயர் பெற்றார்.


 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon