அருள்மிகு காளஹஸ்வரர்

இறைவன் : காளஹஸ்தீஸ்வரர்

இறைவி : ஞானாம்பிகை

தலவிருட்சம் : வில்வம்

 

காவேரிக்கு தென்புறம் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளுகாக தஞசையை ஆண்ட சரபோஜி மன்னனால் இத்திருக்கோவில் நிறுவப்பெற்றது. இத்தலத்தில் உள்ள ஞானாம்பிகையை வழிப்பட்டால் வாயுலிங்க ச்திரமான காளஹஸ்தி வழிப்பட்ட பலன் கிடைக்கும்.

 

இத்திருக்கோவில் கார்த்தியாயினி சமேத கல்யாண சுந்திரமூர்த்தி சன்னிதி தனிச்சிறப்புடன் விளங்கி வருகிறது.

இத்திருக்கோவில் அஷ்ட தசமபுஜமகா துர்க்கைக்கு தனி சன்னிதி இருக்கிறது. இங்கு பழமையான ஜூரஹரேஸ்வர சுவாமி சன்னிதி உள்ளது. விடாது ஜூரம் குறைவாக அடித்தாலும் மிகக் கடுமையாண ஜூரம் இறைவாக இருந்தாலும் சுர்மிக்க வெந்நிரால் அபிஷேகம் செய்து புழங்கள் அரிசி சாதம் மிளகு ரசம், பருப்பு துவையல் நிவேதனம் செய்து வில்வ அர்ச்சனை செய்து விபூதி பிரசாதத்தை சாப்பிட்டால் ஜூரம் இறைந்துவிடும். இந்த ஆலயத்தில் ஆராய்ச்சி மணியை அடித்தால் ஓம் என்ற ஓசை கேட்கும்.

 

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon