குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

கடிச்சம்பாடி

இறைவன் : ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர்

இறைவி : ஸ்ரீ திரிபுரசுந்தராம்பாள்

தலவிருட்சம் :வில்வம்

கடி-நீக்குதல். அச்சம்-பயம் வாழ்வில் பயமிருக்கலாம் ஆனால் பயமே வாழ்க்கையாகிவிட கூடாது இல்லையா? இத்தலத்தின் மகிமையே நம்மனபயத்தைப் போக்குவது தான்

தற்பொழுது சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோயில் முழுவதும் செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது சுமார் 1600 வருடங்களுக்கு முற்பட்ட கி.பி 6 அல்லது 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில். அனேகமாக சோழர்கள் சிற்றரசாக இருந்த பொழுது கட்டிய கோயிலாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சிவகணம்:-
இக்கோயிலின் இராஜகோபுரத்துக்குள் நுழைந்தவுடன் கையில் சங்கு வைத்துக்கொண்டு அதை ஊதும் நிலையில் இலிங்கத்தை நோக்கிய நிலையில் உள்ளது ஒரு சிவகணம். இதன் பக்கத்திலேயே ஒரு பெண் உருவம் தலையில் கொண்டையுடன் வணங்கும் நிலையில் உள்ளது இது போன்று சங்கு ஊதும் சிவகண சிற்பம் கருங்கல்லில் வேறு எங்கும் இல்லை. எல்லாம் வல்ல சிவபெருமானை அவரது அடியரான சிவகணத்ததுடன் சேர்ந்து வணங்குவது இந்த கோயிலில் மட்டுமே மனிதர்களாகிய நம்மால் முடியும். சிவகணத்தை வணங்குவதன் மூலம் சிவனின் அருளைப் பெருவது எளிது

ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர்
மனதில் மாசு இருந்தால் தான் பயம் இருக்கும். எந்தச் செயலையும் தெளிவாக சரியாக செய்ய இயலாது இதனால் வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்களும் தேவையில்லாத மன உளைச்சல்களும் ஏற்பட்டு நிம்மதியே போய்விடும். இதனை நீக்கி மனமாசு ஒழிந்து மாசில்லாத மனதை அளிப்பாவரே இத்தல ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர். கிழக்கு நோக்கிய நிலையில் இலிங்கவடிவில் வீற்றிருக்கிறார்.

ஸ்ரீ திருபுரசுந்தராம்பாள்:
இக்கோயில் தெற்கு நோக்கிய நிலையில் வீற்றிருக்கிறாள் ஸ்ரீ திரிபுரசுந்தராம்பாள். நாங்கு கைகளுடன் கருணையே வடிவாக அபயஹஸ்தம் காட்டி நிற்கிறாள். அம்பாளின் எதிரே ஸ்ரீ மாசிலாமணீஸ்வரருக்கு உள்ளதுபோல் தனியே ரிஷபம் உள்ளது சிறப்பான ஒன்றாகும்

ஸ்ரீ தெக்ஷ்ணாமூர்த்தி:
இக்கோயிலின் பிரகாரத்தில் தெற்கு முகமாக அருள் புரிகிறார் ஸ்ரீதெக்ஷ்ணாமூர்த்தி. இவரின் கீழே சப்த ரிஷிகளின் நாள்வரான சனகர்,வீற்றிருக்கிறார். தெக்ஷ்ணாமூர்த்தியின் சிற்ப அமைதி மிகப் பழமையும் புராதனமும் வாய்ந்தது. வியாழக்கிழமைகளில் இவரை வணங்குவதன் மூலம் கல்வியில் தடை,அறியுக்குறைவு ஆகியவை நீங்கும்.

ஸ்ரீமுருகன்:
வெளிபிரகாரத்தில் கருவரைக்குப் பின்புரம் ஸ்ரீமுருகன் வள்ளி தெய்வானையுடன் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
வடக்குப்புறம் நோக்கி ஸ்ரீதுர்க்கை வீற்றிருக்கிறாள்.
சிறப்புமிக்க செங்கல் கோயிலான இத்திருக்கோயில் தற்பொழுது திருப்பணிசெய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

பலன்:-
இத்தல இறைவனுக்கு பதினொரு ப்ரதோஷ காலங்களில் வில்வ அர்ச்சனை அபிஷேகம் செய்து பிதினொரு முறை வலம் வந்து பிராத்தனை செய்தால் மனபயம் பில்லிவைப்பு,கோர்ட் வழக்குகள் நிவர்த்தியடையும். இது இன்றும் நடைபெற்றுவரும்
உண்மை.

இத்தலம் கும்பகோணத்திலிருந்து நீலத்தநல்லூர் செல்லும் சாலையில் 5கி.மீ தொலைவில் உள்ளது

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon