குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

திரு இன்னம்பூர்

இறைவனின் : தாந்தோன்றியீசர், எழுத்தறிநாதர்,

திருநாமங்கள் : அட்சரபுரீஸ்வரர், ஐராவதேஸ்வரர்

அம்பாளின் : சௌந்தரநாயகி, நித்யகல்யாணி,

திருப்பெயர்கள் : சுகுந்தகுந்தலாம், பூம்கொம்புநாயகி,

கொந்தார்குழலம்மை.

தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்

தலவிருட்சம் : சண்பகமரம், வில்வம்.

இன்ன நம்பு ஊர்- சூரியன் வழிபட்ட ஸ்தலம்

மன்னும் மலையும் கையால் வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறுந் தூப்பொரு ளாயின தூக்கமலத்
தன்ன வடிவின அன்புடைத் தொண்டர்க் கமுதரும்பி
இன்னல் களைவன் இன்னம்ப் ரான்ற னிணையடியே
-திருஞானசம்பந்தர்

 

இத்தல கோயிலின் விமானம் கஜபிருஷ்ட விமானமாகும். தமிழ்நாட்டில்
மூன்றே தலங்களில்தான் இத்தகைய விமான அமைப்பு உள்ளது. குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் செய்து வைக்ககூடிய சிறப்பான ஸ்தலமாகும். முற்காலத்தில் ஆதி சைவ அநதணராகிய சுதன்மன் என்பார். இப்பெருமானை பூசித்து கோயில் நிர்வாகத்தையும் வரவு செலவு செய்து வந்தார். வருடக் கணக்கை மன்னனிடம் அளிக்க மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையறிந்த நேர்மைமிக்க சிதன்மன் மனங்கலங்கி தான் தோன்றியீசனை வணங்கி முறையிட்டார்.

 

மறுநாள் சுதன்வடிவில் அரசனிடம் சென்ற இறைவன் கோயில் கணக்கை குற்றமின்றி எடுத்துரைக்க சந்தேகம் நீங்கி மன்னன் மகிழ்ந்தான் சுதன்மன் கனவில் தோன்றிய இறைவன் நிகழ்ந்ததை எடுத்துரைக்க சுதன்மன் பரவசமாகி இறைவனை வணங்கிப் போற்றினார். இதனாலேயே அப்பர் பெருமானும் எழுதுங்கீழ்கணக்கு இன்னபூர் ஈசனே என்று போற்றிப்பாடுயுள்ளார். துர்வாசர் சாபத்தால் காட்டானையாகி துன்பமுற்ற ஐராவதம் இத்தல இறைவனை வணங்க சாபம் நீங்கியது. ஐராவத யானை உண்டாக்கிய திருக்குளமே இன்றும் உள்ள ஐராவத தீர்த்தம் ஆகும்.
சூரியன் மேலும் ஆற்றல் பெற வேண்டி எழுத்தறிநாதரை வணங்கி அருள் பெற்றார். இன்றும் ஒவ்வொறு வருடமும் ஆவணி மாதம் 31ம் தேதியும், புரட்டாசி மாம்1,2ம் தேதியும் பங்குனி மாதம் 13,14,15 தேதிகளில் சூரியஒளியானது இறைவனின் திருமேனியில் படுவது சூரிய பூஜையாகும். சூரியன் வழிபடுவதற்காகவே இங்கு நந்திதேவர் விலகி அமைந்துள்ளார்.

 

இக்கோயிலின் நடராஜப்பெருமான் விரிந்த சடாமுடியில் இடப்பக்கம் கங்காதேவியும், வலப்பக்கம் நாகமும் உள்ளது. இந்த நடராஜப் பெருமானின் சிற்பம் மிக உன்னதமானது ஆகும். இந்தநடராஜரை இவ்வூர் மக்கள் பெரியவர் என்றே அழைக்கின்றனர். காரணம் ஒரு முறை மீனவர்கள் கடலில் மீன் பிடித்தபொழுது வலையில் ஒரு நடராஜத் திருமேனி கிடைத்தது.

இதனை அப்போது ஆண்ட மன்னனிடம் ஒப்படைக்க அம்மன்னன் நடராஜ திரு உருவம்
இல்லாத கோயில்களின் பெயர்களை தனித்தனி ஓலைகளில் எழுதி ஒரு குடத்திலிட்டு ஒரு சிறு குழந்தையை விட்டு எடுக்கச்சொல்ல, இக்குழந்தை எடுத்தளித்த ஓலையில் இருந்த ஊர் இன்னபூர். இதுவே இந்நடராஜர் அமைந்த செவிவழிச் செய்தியாகும்.

 

சஷ்டியப்தபூர்த்தி (60 வது பிறந்த நாள்) பீமாசாந்தி (70 வது பிறந்த நாள்) ஹோமம் செய்து இக்கோயிலில் அருள்பெருவது மிகவும் விசேஷமாகும்.

கும்பகோணம் சுவாமிமலை சாலையில்ப் பேருந்து சாலையில் புளியஞ்சேரிக்கு வடக்கே 2.கி.மீ தொலைவில் உள்ளது இன்னபூர்

 

  

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon