அருள்மிகு கௌதமேசர்

இறைவன் : அருள்மிகு கௌதமேசர்

இறைவி : அருள்மிகு சௌந்தநாயகி

தலவிருட்சம் : வில்வம்

ஊழிக்கால பெருவெள்ளத்தில் மிதந்து வந்த தங்கிய அமுத குடத்தை வேட உருவத்தில் தோன்றிய சிவபெருமான் அம்பால் சிதைத்தபோது கும்பத்தில் மேலிருந்த பூணூல் (உபவீதம்) ஓரிடத்தில் வழுந்தது ஒரு சிவலிங்கமாக தோன்றியது. அதுவே கௌதமேசர் கோவில் பூணூல் யக்ஞோபவீதம். எனவே யக்ஞோபவீதேசர் எனப் பெயர் கொண்டார் இறைவன். அம்பாள்
சௌந்தரநாயகி ஆவாள்.

 

திரேதாயுகத்தில் கௌதமர் என்ற முனிவர் இருந்தார். இவரும் இவர் மனைவியும் சிவனிடம் நீங்காது பக்தி கொண்டு சிவனருள் பெற்று வாழ்ந்துவந்தனர். கௌதமர் வேதாசாரமாகிய விபூதியையும், முறைப்படி உருத்திராச்சங்களையும் அணிந்து பஞ்வாகூரத்தை செபித்து வந்தார். அதோடு மட்டுமல்லாது தம்மை நாடி வருவோர் அனைவருக்கும் இத்தம்பதியினர் வயிறு நிறைய மனம் குளிரும்படி அன்னமிட்டு அகமகிழ்ந்து வந்தனர்.

 

இவ்வாறு வாழ்ந்து வரும் காலத்தில் தல யாத்திரை செய்யும் பொருட்டு பல்வேறு தலங்களுக்கும் சென்று அத்தலங்களில் அந்தணருக்கு அன்னமிட்டு மகிழ்ந்தனர். எவ்வாறெனில் கௌதமர் தம் தவ வலிமையால் தாம் செல்லும் இடங்களில் உள்ள வயல்களில் அரிசியாகவே செய்து வந்தனர்.

இவ்வாறு அவர்கள் சீர்காழி வந்தபோது அங்கு கௌதம தம்பதியருக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. ஆதாவது சீர்காழிக்கு அவர்கள் வந்தபோது துவாதச வருஷம். கடுமையான பஞ்சம், சிரிது நீர் உற்றினாலும் நிலம் உரிஞ்சிவிடும். ஏங்கும் பசுமையின்றி பாலை போன்ற கடும் வறட்சி.

 

ஆயினும் தவ வலிமைக் கொண்ட கௌதமர் அமைத்த ஆசிரமத்தில் மட்டும் அதிசயம். அறுசுவை உணவுடன் அனைவருக்கும் உணவு வழங்கி வந்தார்.

 

இதன் இரகசியம் கேட்டனர் சில பாதகர். காரணம் அதை தம் இருப்பிடத்திற்கு கொண்டு போவதற்காக. கௌதமர் புன்னைகையுடன் மறுக்க அப்பாதகர் மந்திர வழிமையால் உடல் இளைத்த ஒரு பசுவை உண்டாக்கி அதை கௌதமர் முன் விட்டனர். அப்பசுவைக் கண்ட கௌதமர் மனமிரங்கி 'ஐயொ பாவம்,வநச்சியால் உடல் வற்றிவிட்டதே' என தம் தவ வலிமையால் சக்தியளிக்க எண்ணி கையால் மெல்ல தடவினார். உடனே அந்த பசு கீழே விழுந்து உயிர் துறந்தது.

 

கூடியிருந்தோர் பசுவை கொன்று விட்டீரெ எனக் கூறி ஓடி விட்டனர். கௌதமர் கலங்காது கண்மூடி ஞான திருஷ்டியால் 'என்ன காரணம்?' என்று பார்க்க இது பாதகர் செய்த மோசம் என உணர்ந்து பாதகரை சபித்து விட்டு மாயூரம் நோக்கி நகர்ந்தார். மாயூரநாதரை அடைந்து துஷ்டருடன் சேர்ந்திருந்த தோஷத்தையும் மாயபசுலைக் வதைத்த தோஷத்தையும் நீக்க வேண்டினார்.

 

இப்போது துர்வச முனிவர் பாவங்களையெல்லாம் போக்கும் புண்ணிய ஸ்தலமாம் கும்பகோணம் சென்று காவேரியில் நீராடி மகாமக குளத்தின் தென்மேற்கில் வீற்றிருக்கும் யக்ஙோபவீதரை வணங்கி பூசித்து வேண்டினால் பாவமெல்லாம் பறந்துவிடும் என்று கூறினார்.

 

அதன்படியே கௌதமரும் கும்பகோணம் வந்து யக்ஙோபவீதேசரை பூசித்து வணங்கி பாவவீமோசனம் அடைந்தார். அதுமுதல் இத்தலமூர்த்தி கௌதமேசர் என வழங்கப்படுகிறார்.

பாவவீமேசனம் தரும் கௌதமேசர் கோவில் மகாமகக் குளக்கரையில் சிறிது தென் மேற்கே சென்றால் உள்ளடங்கியுள்ளது.

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon