குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

ஏராகரம்

இறைவன் : ஸ்ரீ ஸ்கந்தநாத சுவாமி

இறைவி : ஸ்ரீ சங்கரநாயகி

தலவிருட்சம் : நெல்லி

தீர்த்தம் : சரவணப்பொய்கை (தற்போது இல்லை)

வரலாற்றுப்பெயர் : மும்முடிச்சோழமங்கலம்

ஏராகரம். வேலும் மயிலும் காக்கும் என்பர் முருக பக்தர். அந்த முருகன் கையிலிருக்கும் வேல் இத்தலத்தில் உள்ள ஸ்ரீசங்கரி அம்மனிடம் இருந்து பெறப்பட்டது. முன்னொரு காலத்தில் உலகில் அசுரர்களால் மனிதர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் போக்க சிவபெருமான் குழந்தையான கந்தனை அழைத்து முனிவர்கள் இன்னல்களைப் போக்க பூவுலகம் செல்லுமாறு கூற குழந்தையான முருகனும் பூவுலகில் நான் எங்கு சென்று தங்குவது? என வினவ எம்பெருமான் சிவபெருமான் ஒரு அஸ்த்திரத்தைக் கொடுத்து இதை நீ எய்யும் பொழுது எந்த இடத்தில் சென்று தங்குகிறதோ அதை உன் அகமாகக்கொள் என்றார். முருகனும் அவ்வாறே செய்ய அந்த அஸ்த்ரம் விழுந்த இடம்தான் ஏராகரம்.

 

அசுரர்களை அழிக்க முருகப்பெருமான் புறப்பட்ட பொழுது தன் பெற்றோர்களையும் விநாயகரையும் வணங்கிச் செல்ல விரும்பினார். அப்பொழுது ஸ்ரீசங்கரநாயகி சமேத ஸ்ரீஸ்கந்தநாத சுவாமியாக இத்தலத்தில் சிவபெருமான் எழுந்தருளினார்

ஸ்கந்தர் வழிபட்டு வெற்றி பெற்றமையால் ஈசன் பெயர் ஸ்கந்தநாதர் ஆயிற்று. முருகன் வழிபாடு செய்ய ஏற்படுத்திய தடாகமே சரவணப்பொய்கை. குமரன் அமர்ந்த இடம் என்றதால் குமாரபுரம் என்ற பெயரும் வழங்கலாயிற்று.

 

சாபவிமோசனம்
கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தையில் கைதேர்ந்த மந்தகன் என்ற அந்தணர் ஒரு கரடியின் சடலத்தில் நுழைந்த திரியலானார். அப்போது தவத்தில் ஈடுபட்டிருந்த முனிவர் ஒருவருக்கு கரடி தொல்லை தர அவர் அகக்கண்ணால் பார்க்க இது கரடி அல்ல ஓர் அந்தணன் எனக் கண்டு இந்த உருவத்தோடே இருக்கக் கடவாய் என்று சபித்துவிட்டார். கரடி உருவ அந்தணரின் மனைவி முனிவரிடம் வந்து வேண்டிக்கொள்ள அதற்கு அவர் முருகனால் ஏற்படுத்தப்பட்ட சரவணப்பொய்கையில் இருவரும் நீராடி சங்கரிநாயகி சமேத ஸ்ரீஸ்கந்தநாதரை வழிபட்டால் சாபம் நீங்கும் எனக் கூற தம்பதியர் அவ்வாறே சாபம் நீங்கப் பெற்றனர்.


குடந்தையிலிருந்து சுவாமிமலை செல்லும் வழியில் இன்னம்பூர் எனும் திருத்தலத்திற்கு வடகிழக்கில் 2மைல் தூரத்தில் உள்ளது ஏராகரம்.

 

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon