குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

சோழபுரம்

இறைவன் : ஸ்ரீகைலாசநாதர்

இறைவி : ஸ்ரீ சிவபூரணி அம்பாள்


சோழபுரம் கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் உள்ள சிறப்பு வாய்ந்த தலம். என்ன சிறப்பு எங்கீர்களா? நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கும் கிரகங்களிலேயே ஈசுவரப்பட்டம் பெற்ற கிரகம் எது தெரியுமா? சனிபகவான் அந்த சனிபகவான் ஈஸ்வரப்பட்டம் பெற்றது இந்த சோழபுரத்தில்தான்.

 

தவறு செய்யாத மனிதர் உலகில் யார்? நாம் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளால் கரிதோஷம் பிடித்து பல்வேறு கிரச்சினைகளால் முழிபிதுங்கிறோம். அதற்கு சரியான பரிகரத்தால் சோழபுரம். சனிதசை,சனிபுத்தி, சனி அந்தரங்களில் உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள ஸ்ரீ சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் காப்பிட்டு அபிசேக ஷக ஆராதனைகள் செய்து கறுப்பு அல்லது கருநீலவஸ்திரம் சாத்தி வழிபட்டால் கர்மவினைகளின் வேகம் குறைந்து நாம் நிம்மதிப்பெரு மூச்சு விடலாம்.

 

ஸ்ரீசனிஸ்வரப் பட்டம்
ஈஸ்வரப்பட்டம் பெறுவதற்காக கடுமையான தவங்கள் மேற்கொண்ட ஸ்ரீசனிபகவான் கைலாயமலையில் சிவபெருமானைக் காண சென்றார். அங்கே அதிகார நந்தியானவர் எம்பெருமான் யோக நிலையில் இருப்பதால் வாசலில் சற்று காத்திருக்குமாறு சனிபகவானிடம் கூறினார். அப்போது உள்ளேயிருந்து வண்டுவடிவில் சிவனைத் தரிசனம் செய்துவிட்டு வந்த பிருங்கி முனிவர் சனி பகவானிடம் முதலில் பராசக்தியை வணங்கி அருள் பெற்றால் ஈஸ்வரப்பட்டம் எளிதில் கிடைக்கும் என்றார். மேலும் அதற்கு சரியான ஸ்தலம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் என்று கூற ஸ்ரீசனி பகவான்னும் சோழபுரம் வந்தடைந்தார்.

 

அவர் வந்தபோது அமாவசையும் சரிநாளும் கூடிய தினம் சனிபகவான் அம்பிகையை வணங்க கரிநாளிலும் அமாவசையிலும் இத்தலலிங்கத்தை பூசிப்போர்த்ரயம் பகநேத்ரலிங்க தரிசனம் கிடைக்கும். இதனை வழிபட்டு ஈஸ்வரப்பட்டம் பெறுவாயாக என்றாள் அம்பிகை. சிவபெருமானின் நெற்றிக்கண் ஒட்டிய சாந்திப்பொட்டினை அம்பிகை லிங்கமாக்கித் தர ஸ்ரீ சனிபகவான் மனம் உருக பூசிக்க கிடைத்தே விட்டது ஈஸ்வரப் பட்டம்.ஸ்ரீசனிஸ்வரன் எனும் பட்டத்துடன் இன்றும் சோழபுரம் ஸ்ரீகைலாயநாதர் ஆலயத்தில் அம்பிகையின் திருசன்னிதியில் முன் த்ரயம் பக நேத்ர லிங்கத்தை (இரவே ஸ்ரீமுக்கண்மாலீஸ்வரர்) சனிஹோரை நேரம் கரிநாள், அமாவாசை ஆகிய தினங்களில் இப்பூஜைகள் நிறைவேற்றி வருதல் மிகவும் சிறப்புடையதாகும்.

 

மாடக்கோயிலாக கலைவண்ணம் மிளரும் சோழபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோயில் மிகவும் பழைமையானது. இக்கோயிலை செம்பியன் மாதேவியார் எனும் சோழ அரசி கட்டியதாகக் கூறப்படுகிறது.

 

 

 

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon