குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

 

அரிசிற்கரைப்புத்தூர்
(அழகாபுத்தூர்)

இறைவன் : திரு சொர்ணபுரீஸ்வரர்

இறைவி : திரு அழகாம்பிகை

சங்கு சக்கரம் கொண்ட முருகஸ்தலம்

வள்ளிமுலைதோய் குமரன் தாதை வாந்தோயும்
வெள்ளிமலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர்
தெள்ளிவருநீ ரரிசில் தென்பாற் சிலைவண்டும்
புள்ளும்மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே
-திருஞானசம்பந்தர்

 

கும்பகோத்திலிருந்து நாச்சியார் கோயில் செல்லும் வழியில் வயல் வெளிகளினூடே தாமரை மலர்ந்தது போல் உள்ள திருத்தலம் தான் அழகாபுத்தூர். இதன் முழுமையான பெயர் அரிசிற் தென்கரை அழகார் திருப்புத்தூர் என்பதாகும். அரிசொல் ஆற்றில் தெங்காரையில் அமைந்த அழகான புத்தூர்.

இத்தலம் தான் எத்தூணைபெருமைகள் கொண்டது.

1) சிவ அம்சமான ஸ்ரீ முருகப்பெருமான் விஷ்ணு அம்சம் கொண்டு சங்கு சக்ரதாரியாக விளங்கும் ஒரே ஸ்தலம்.
2) 63 நாயன் மார்களில் ஒருவராகிய புகழ்த்துணை நாயனார் அவதரித்த ஸ்தலம்
3) சைவசமயக்குரவர் நால்வருள் மூவரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
4) இத்தல இறைவன் சொர்ணபுரீஸ்வரர் படிக்காசு வைத்த பரமனாக விளங்கும் ஸ்தலம்.

 


இப்படிப் பல்வேறு பெருமைகளையும் கொண்டுள்ளது அழகாப்புத்தூர்.

கலையின் புதுமை
ஸ்ரீ இராமபிராணைப் போன்று வில்லேந்திய நிலையில் சில தலங்களில் முருகனைக் காணலாம். ஆனால் திருமாலைப் போன்று சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கும் திருத்தோற்றம் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமும் சிற்பக்கலையின் புதுமையும் ஆகும் . பன்னிரண்டு கரங்களோடு கூடிய முருக்பெருமானின் பத்துக்கரங்களில் அவருக்கேயுரிய படைக்களங்க்ளும் மற்ற இருகரங்களில் வலப்புறம் சக்கரமும், இடப்பறம் சங்குடனும் வீற்றிருக்கிறார் முருகப்பெருமான்.

 

புகழ்துணை நாயனார்
இத்தலத்தில் அவதரித்து முக்தி பெற்றவர் 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்துணை நாயனார்

இவர் அழகாபுத்தூரில் அமைந்தருளும் இறைவருக்கு நாள் தோறும் அபிஷேகம், அர்ச்சனை செய்து ஆனந்த பக்தியில் திளைத்தவர். தன் கைப்பெருள்களையெல்லாம் விற்று இறைவனுக்குத் தொண்டு செய்ததில் நாளடைவில் அவரை வறுமை சூழ்ந்தது. இறைவனுக்கு கைங்கர்யம் செய்ய பொருளில்லாமல் புகழ்துணையார் கலங்கினார், கதறினார். தன் வறுமையை எணிணி மனம் வருந்தினார்.

ஒரு நாள் கனவில் தொன்றிய இறைவன் ஒவ்வொரு நாளும் சிவலிங்கத்தின் அருகில் ஒரு பொற்காசு வைத்திருப்பதாகவும் அதைக்கொண்டு பூஜை செய்யும் படியும் கூற அவ்வாறே மறுநாள் முதல் சிவலிங்கம் அருகே ஒரு பொற்காசு இருந்தது. அதை எடுத்துப் போய் செம்பியவரம்பல் ஊரில் கடை வைத்திருந்த ஒரு செட்டியாரிடம் கொடுத்து தேவையான பூசை மற்றும் தன் குடும்பத்திற்கான பொருள்களை வாங்கிவருவார். அந்தக் கடை வைத்திருந்த செட்டியாரும் ஒரு சிறந்த சிவபக்தர். ஆயினும் நாளடைவில் புகழ்துணையாரை ஏமாற்ற ஆரம்பித்தார்.

 

ஒரு நாள் புகழ்துணை நாயனாரின் கனவில் தோன்றிய ஈசன் இது வரைகொடுத்த காசு அனைத்துமேவா செலவாகிவிட்டது கொஞ்சம் கூட மீதமில்லையா எனக்கேட்க பொருளுக்கு ஆசைப்படாத நாயனாரும் இல்லையே எனக் கூற நாளை நான் தரும் ஒரு பொற்காசுக்கு எடைக்கு எடைப் பெருள் கேள் எனக்கூற அவ்வாறே மறுநாள் ஒரு பொற்காசுக்கு எடைக்கு எடை பொருள் கேட்டார் புகழ்துணை நாயனார். மனதிற்க்குள் சிறித்துக்கொண்டே காசை தராசின் ஒரு தட்டில் வைத்து மறு தட்டில் கடைப்பொருள் முழுவதை வைத்தும் சமமாகவில்லை. அவருடைய சொத்துக்கள் முழுவதும் பொருளாக வைத்தும் சமமாகவில்லை.

மீதமிருந்தது அவரும் மனைவி மக்களும் தான். குடும்பத்தோடு செட்டியார் தராசுத் தட்டில் ஏறி நிற்க தட்டு சமமானது. இது இறைவனின் திருவிளையாடல் என்பதும் தன்னை ஆட்கொள்ளவே இறைவன் இவ்வாறு செய்துள்ளார் என்பதும் புரிந்த செட்டியார் பின் கோயிலுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். செட்டியாரும் அவர் மனைவியும் இன்றும் சிலை வடிவில் அழகாபுத்தூர்கோயிலில் இறைவனைத் தொழுதபடி இருக்கின்றனர்.

அரிசொல் ஆற்றிலிருந்து நீர் எடுத்து வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தார் நாயனார். ஒரு நாள் அபிஷேக நேரம் நெருங்கிவிட்டது. உடல் தளர்வுற்று மிகவும் களைப்புற்றிருந்தது. ஆனாலும் காலம் கட்ந்து விடக்கூடாதே. நியதி தவறாத நாயனார் உடல் தளர்ச்சியையும் பொருட்படுத்தாது ஆற்றிலிருந்து குடத்தில் நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்ய குடத்தை உயர்த்திய போது கை நடுங்கியது. இறைவனின் திருமுடியில் குடம் விழுந்தது. சிவசிவ என்ன பாவம் செய்து விட்டேன். இறைவா என் எனக்கு இந்த சோதனை என்று உடல் பதற, உள்ளம் துடிக்க அப்படியே மயங்கி இறைவனின் மீதே விழுந்தார் புகழ்த்துணைநாயனார். அடியாரை அதற்கு மேலும் சோதிக்க விரும்பாத இறைவன் நாயனாருக்குக் காட்சியளித்து வீடுபேயறளித்தார். இத்தகு சிற்ப்புடைய ஸ்தலம் அவசியம் நாம் கண்டு வணங்க வேண்டிய ஸ்தலமாகும்.
 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon