குடந்தையை சுற்றியுள்ள கோவில்கள்

  சிவபுரம்

திருத்தண்டிகை புரம்

திருக்கருவிலிக் கொட்டிட்டை

திருவைகல்

 

திரு ஆவூர்

இறைவன் : திரு பசுபதீச்சுரர்

இறைவி : திரு மங்களநாயகி

தலவிருட்சம் : வில்வமரம்

தலதீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், காமதேனு தீர்த்தம், தாசிகுளம்

புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடுவார் தம் மனத்தார் திங்கள்
கண்ணியர் என்றென்று காதலாளர் கைதொழுதேத்த இருந்தவூராம்
விண்ணுயல் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடலறாத ஆவூர்ப் பசுபதீச்சரம் பாடுநாவே
-திருஞானசம்பந்தர்

தென்னஞ்சோலைகள் மிகுந்து செந்நெற்பயிர்கள் அசைந்தாடும் வண்ணம் பொய்கைகள் சூழ்ந்த திருமகள் திகழும் பசுபதீச்சுரம் என அழைக்கப்பட்ட வளமுடைய சோழநாடு வளவ நாடு என்று அழைக்கப்பட்டது. அந்த வளவநாட்டின் ஒரு முக்கியமானத் தலம் தான் திருஆவூர். எண்டோள் ஈசற்கு எழுபது மாடம் அமைத்தான் என்ற திருமங்கை மன்னன் குறிப்பின்படி கோட்செங்கட் சோழன் கட்டிய 70 மாடகோயில்களுள் இத்தலக் கோயிலும் ஒன்று

ஆதிசேடன் வாயுபகவான் போர்
ஆதிசேஷனுக்கும் வாயுபகவானுக்கும் ஏற்பட்ட பலப்பரிச்சையில் வாயுவினால் வேகமாக வீசப்பட்ட காற்றில் மேருமலையின் இரு சிகரங்கள் பெயர்ந்து ஒன்று (சந்தகிரி) திருநல்லூடிலும் மற்றொன்றான மணிகூடகிரி திருஆவூரிலும் விழுந்தது.

விசிஷ்டரின் கோபத்தால் ஏற்பட்ட சாபத்தைப் போக்க காமதேனுவுக்கு நாரதரால் சுட்டிக் காட்டப்பட்ட ஸ்தலம் தான் திருஆவூர். இது புராணகாலத்தில் அசுவத்தவனம் என அழைக்கப்பட்டது. இத்தலத்தில் பல மகாரிஷிகளும் தவம் செய்துள்ளனர். இத்தலம் வந்த காமதேனு பசு உருவம் கொண்டு அசுவத்தவனத்தில் ஒரு இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட சாபம் நீங்கியது.

மேலும் இத்தலத்தில் தர்மத்துவஜனின் குஷ்டரோகமும் நீங்கப்பெற்றது. இக்கோயிலில் இரண்டு அம்மன் சன்னிதிகள் உள்ளன. இதில் மங்காளம்பிகை சிலை ஓர் குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மற்றொன்று பங்கஜவல்லி இவரே பழமையானவர் என அறியப்படுகிறது. இவ்வாறு மூர்த்தி தலம் தீர்த்தம் என் மூவகையாலும் சிறப்புற்றுத் திகழ்கிறது. இத்தலம் 3ம் இரஜேந்திரன் திருப்பணி செய்த கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

மாபெரும் சிறப்புடைய இத்தலம் கும்பகோணத்திலிருந்து தென்மேற்கே 6கி.மீ தொலைவில் உள்ளது. சங்கப்புலவர்கள் ஆவூர் மூலங்கிழார் அவர் மகன் பெருந்தலைச் சாத்தனார் ஆகியோர் இவ்வாவூரில் பிறந்து தமிழுலகிற்கே பெருமை சேர்த்துள்ளனர். கி.பி.2ம் நூற்றாண்டில் ஆவூர் சோழமன்னர்களின் வலிமைமிக்க கோட்டையாகத் திகழ்ந்தது. திருஆவூர் கோயிலின் தட்சிணாமூர்த்தி சிலையின் உயரம் 5அடி. வில்லும் அம்பும் ஏந்திய முருகனின் சிலை 7அடி உயரம்.

 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon