ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் கோவில் 

இறைவன்         : அருள்மிகு திகும்பேஸ்வரா   

இறைவி           : அருள்மிகு ஸ்ரீமங்களாம்பிகை

தல விருட்சம்   : வன்னி மரம்

தீர்த்தம்            : பிரம்ம தீர்த்தம்

 
அரவிரி கோடனி டலணிகாவேரி யாற்றயலே
மரவிரிபோது மௌவல் மணமல்லிகை கள்ளவிழும்
குரவிரி சோலை சூழ்ந்த குழகன்குட மூக்கிடம்
இரவிரி திங்கள் சூடியிருந்தா னெம்மிறையே
                           -       திருஞானசம்பந்தர்

 

மணியாடுபாவை எனப்படும் கும்பகோணம் நகரின் நடுநிலையாக  விளங்குகிறது இத்திருக்கோவில். குலம் கணிக்க முடியாத மிகப்பழைமையான திருக்கோவில் நான்கு இராசகோபுரங்களுடன் கம்பீரமாக விளங்கும் இத்திருக்கோவிலில் அருள்மிகு ஆதிக்கும்பேசரும், அருள்மிகு மங்களாம்பிகையும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.ஆதிகும்பேசர்
       இத்தலம் மகாபிரளயத்திற்கு பின் உலகில் தோன்றிய முதல் தலமாகும். ஊலக உயிhகளின் தோற்றத்திற்கு ஆதி மூலமாகிய இத்தலத்தில் அமுத கும்பத்தில் இருந்து இறவைர் தோன்றியதால் ஆதிகும்பேசர் என்றும் அமுதேசர் என்றும் அழைக்கப்படுகிறார். திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில் இவ்விறைவனை குழகன் என்று பாடுகிறார்.

 

மகாபிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த பிரம்ம தேவரின் சிருஷ்டி பீஜ அமிர்த குடந்தைக் கிராதமூர்த்தியாக (வேட உருவில்) உருவமெடுத்து வந்த சிவபெருமான் அம்பெய்து குடத்தின் மூக்கை எடைத்தார். எனவே  இத்தலத்திற்கு குடமூக்கு என்று பெயர் உண்டாயிற்று. குடம் எடைத்தும் மண்ணில் பரவிய அமிர்தத்தால் மண்ணைக் குழைந்து ஒரு இலிங்கத்தை தமது கையாலேயே சிருஷ்டித்தார் சிவபெருமான். பின் அந்த இலிங்கத்துக்குள் உறைந்து சுயம்ப வடிவமானார். ஆவர் தான் இன்று நாம் வணங்கும் கும்பேஸ்வரர். 

சிந்திய  அமிர்தம் வழிந்தோட அந்த இடத்திலே தான் மகாமகக்குளம் இருக்கிறது. ஆதாலால் தான் இங்கே பெருகும் தீர்த்தம் மாபெரும் பெருமை கொண்டுள்ளது.

ஸ்ரீமங்களாம்பிகை      

 

காமகிரி பீடம், ஜாலத்திர பீடம், உட்டியாண பீடம், பூரணகிரி பிடம், என நான்கு பீடங்களையும் ஒன்று சேர்த்து பீடத்தில் எழுந்தருளி மந்திரபீடேஸ்வரியாக அருள்புரிகிறார். ஸ்ரீமங்காளம்பாள்.

முற்ற தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவத்தை மட்டும் கொண்டிருக்க மங்களாம்பிரகயின் உடற்பாகம் உச்சி முதல் பாதம் வரை 51 சக்தி வடிவ பாகங்களாக அமைற்துள்ளது. அதாவது 51 பீஜாட்சரங்களில் தோன்றி 72000 மந்திரங்கள் கொண்ட பீடத்தில் வீற்றிருக்கிறாள் அம்பாள்.

அன்னை மங்களாம்பிகை சந்தியின் எதிரில் ரிஷபம் அமைந்துள்ளது. ஏனெனில் அம்பாளின் அமைப்பு திருதியாவரணம் ஆகும். தம்மை வணங்கும் அடியாருக்கு மங்களத்தை அள்ளித் தரும் வள்ளல் மங்களநாயகியாவாள். 

 

Copyrights © 2009 - 2011  123 Temples.com   All Rights Reserved
Site design and Maintained by
Anna Silicon